தயார்!பொங்கலுக்கு மண்பானைகள் ..தேடி சென்று வாங்கும் வாடிக்கையாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

13 ஜன
2019
03:07
பதிவு செய்த நாள்
ஜன 13,2019 00:52

செங்குன்றம்:பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, பானைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.நாகரிக வளர்ச்சியால், நகர்ப்புறங்களில், பானையில் பொங்கல் வைக்கும் பழக்கம், மெல்ல மறைந்தாலும், கிராமங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், பொங்கல் பானைக்கு இன்றும் வரவேற்பு உள்ளது.அந்த வகையில், களிமண்ணில் தயாரிக்கப்படும் பானை உள்ளிட்ட மண்பாண்டங்களை, மக்கள் தேடி சென்று வாங்குகின்றனர்.சோழவரம் அடுத்த, ஜெகன்னாதபுரம் ஊராட்சி, இனாம் அகரம் கிராமத்தில், மண்பாண்டங்கள் உற்பத்தி ஜோராக நடக்கிறது.அங்குள்ள கிருஷ்ணன், 73, என்பவரின் குடும்பத்தினர், பொங்கல் பானை, குழம்பு சட்டி, அடுப்பு ஆகியவற்றை, உற்சாகமாக தயாரிக்கின்றனர்.அங்குள்ள ஏரிகளில், களிமண்ணை விலைக்கு வாங்கி, அவற்றை ஈரப்பதத்திற்கு மாற்றி, மண்பாண்டங்களாக உருவாக்குகின்றனர். பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தினமும், 30 - 40 பானை மற்றும் அடுப்புகளை தயாரிக்கின்றனர். அங்கு பெரிய பானை, 100 ரூபாய்க்கும், சிறிய பானை, 60 ரூபாய்க்கும், குழம்பு சட்டி, 50 ரூபாய்க்கும், அடுப்பு, 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.நான், 45 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த தொழில் செய்து வருகிறேன். இப்போது, மண்பாண்ட உற்பத்திக்கு தேவையான களிமண்ணை, விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இதர செலவுகளும் அதிகரித்துள்ளன. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, வாழை இலை பயன்படுத்துவது போல், எவர் சில்வர், கண்ணாடி பீங்கான் பாத்திரங்களுக்கு பதில், மண் பாண்டங்களை, மக்கள் பயன்படுத்தினால், எங்கள் தொழில் மேம்படும். குறைந்த கட்டணத்தில் களிமண் கிடைக்க, அரசு உதவி செய்ய வேண்டும்.கிருஷ்ணன், 73, மண்பாண்டம் தயாரிப்பவர், இனாம் அகரம்

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜன-201918:45:07 IST Report Abuse
Bhaskaran மைகிறோ wave அடுப்பில் பயன்படுத்தக்கூடியதுபோல் சிறிய மட்பாண்டங்கள் தயாரித்து சந்தைப்படுத்தினால் இந்த தொழிலுக்கு மிக அருமையான எதிர்காலம் உண்டே ஐயா
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜன-201909:37:47 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒருநாளைக்கு பதிலாக அன்றாடம் இவற்றில் சமைத்தால் மருத்துவ செலவும் மிச்சம் ஆரோக்கியமும் வளரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X