| சி.எம்.டி.ஏ.,வுக்கு தீர்ப்பாயம் உத்தரவு Dinamalar
சி.எம்.டி.ஏ.,வுக்கு தீர்ப்பாயம் உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜன
2019
23:30

-பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டி, தனியார் நிறுவன கட்டுமான திட்டத்தால், நீர் வழித்தடத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்ற புகார் குறித்து, ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க, சி.எம்.டி.ஏ.,வுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டி, நாராயணபுரம் ஏரியில் இருந்து நீர் செல்லும் வழியை, தடுக்கும் வகையில், தனியார் நிறுவனம் குடியிருப்பு கட்டுவதாக அப்பகுதி மக்கள், தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கடிதம் அனுப்பினர்.இக்கடிதத்தில் உள்ள குற்றச்சாட்டு அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயம், கடிதத்தை மனுவாக ஏற்று, வழக்குப் பதிவு செய்தது.


இது தொடர்பாக, பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு பிறப்பித்த உத்தரவு:நாராயணபுரம் குடியிருப்போர் சங்கம் அனுப்பிய புகார் அடிப்படையில், இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.


இதில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, சம்பந்தப்பட்ட பகுதியை பார்வையிட்டு, கள நிலவர அறிக்கையை, ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்ய, சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., ரியல் எஸ்டேட் ஆணையம் ஆகியவற்றுக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


- நமது நிருபர்

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X