| 'கெட்ட தொடுதல் குறித்து விளக்க வேண்டும்' Dinamalar
'கெட்ட தொடுதல் குறித்து விளக்க வேண்டும்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜன
2019
01:41

திருப்பூர்:'நல்ல, கெட்ட தொடுதல் குறித்து, மாணவியருக்கு விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென,' போலீஸ் துணை கமிஷனர் அறிவுறுத்தினார்.அவிநாசி அருகே அணைப்புதுார் மற்றும் சூர்யா நகரிலுள்ள ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளிகளின் ஆண்டு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் அம்மாசையப்பன் தலைமை வகித்தார். பள்ளி தலைவர் குப்புசாமி, துளசிமணி குத்துவிளக்கேற்றினர். பள்ளி முதல்வர்கள் மணிமலர், கலைமணி முன்னிலை வகித்தனர். தாளாளர் லட்சுமி நாராயணன் வரவேற்றார்.


சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருப்பூர் போலீஸ் துணை கமிஷனர் உமா பேசியதாவது:தற்போது நாட்டில் எந்த இடம் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத பல இடங்களில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கு உடல்ரீதியாக ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பெற்றோர் தீர்வு காண வேண்டும்.குறிப்பாக, பெண் குழந்தைகளை தனியாக அனுப்பக்கூடாது. பெரும்பாலும் நமது நெருங்கிய உறவினர்கள், பக்கத்து வீட்டில் நன்றாக பழக்கூடியவர், தெரிந்தவர் என பலரும் விளையாட்டாக இந்த குற்ற செயலில் ஈடுபடுகின்றனர். அதனால், பெண் குழந்தைகள் வெளியே சென்று விட்டு வரும்போது சென்ற விஷயம் குறித்து நாம் அவர்களிடம் பேசி தெரிந்துகொள்ள வேண்டும்.குறிப்பாக நல்ல மற்றும் கெட்ட தொடுதல் குறித்து விளக்கி சொல்வதுடன், அவ்வாறு நடந்தால் உடனே பெற்றோர் அல்லது தோழி, ஆசிரியர்களிடம் தெரிவிக்க பழக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் சைல்ட் ஹெல்ப் லைன் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.பள்ளி மாணவ, மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சி நடந்தது. இதனை, பெற்றோர், பார்வையாளர் ரசித்து பார்த்தனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் மற்றும் ஆசிரியர்கள் குழுவினர் செய்து இருந்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X