| திருவள்ளுவர் கோவில் திருப்பூரில் திறப்பு விழா Dinamalar
திருவள்ளுவர் கோவில் திருப்பூரில் திறப்பு விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜன
2019
01:42

திருப்பூர்:திருப்பூரில் திருவள்ளுவர் கோவில் நேற்று திறக்கப்பட்டது.திருப்பூர் மக்கள் மாமன்றத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, திருவள்ளுவருக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு அடி உயர திருவள்ளுவர் சிலை செய்யப்பட்டு, கோவிலில் வைக்கப்பட்டது.இந்த கோவிலை, நேற்று உலக திருக்குறள் பேரவை, மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ அடிகளார் திறந்து வைத்தார். மக்கள் மாமன்ற நிர்வாகிகள் சுப்ரமணியம், ராஜா, கிருஷ்ணன் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர்.திருவள்ளுவர் சிலை மற்றும் அங்குள்ள பொது நுாலகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருபவர்கள் திருவள்ளுவரை வணங்கி விட்டு, அங்குள்ள பதிவேட்டில் தங்களது பெயர், தங்கள் பிடித்த குறள், தெரிந்திருந்தால் கருத்து எழுதலாம். திருக்குறள் புத்தகமும் அருகில் வைக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X