| அடிக்கல் நாட்டியாச்சு... கட்டடம் என்னாச்சு? சமுதாயக்கூடம் கட்டும் பணியில் தொய்வு Dinamalar
அடிக்கல் நாட்டியாச்சு... கட்டடம் என்னாச்சு? சமுதாயக்கூடம் கட்டும் பணியில் தொய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜன
2019
01:42

அவிநாசி:அவிநாசியில், சபாநாயகரால் கடந்த, 3 ஆண்டுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட சமுதாயக்கூடம் கட்டுமானப்பணி, நிதி ஒதுக்கீடு வராததால், இதுவரை துவங்கப்படவில்லை.அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட, 16, 17, 18வது வார்டில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த வார்டுகளில் வசிப்பவர்கள், சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவாக, முத்துசெட்டிபாளையத்தில், சமுதாயக்கூடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, 10 லட்சம் ரூபாய், நிதியும் ஒதுக்கப்பட்டதுகடந்த, 2016, ஜூலை, 30ல், சபாநாயகர் தனபால், அடிக்கல் நாட்டினார். 'பில்லர்' அமைக்கப்பட்ட நிலையில், திடீரென பணிகள் கைவிடப்பட்டது.அப்பகுதியினர் கூறுகையில், 'வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளை, தனியார் மண்டபங்களில் பெரும் தொகை செலவழித்து நடத்த வேண்டியுள்ளது; பேரூராட்சி சார்பில் செயல்படும் சமுதாயக்கூடங்களில் குறைந்தளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, சமுதாயக்கூட கட்டுமானப்பணியை விரைவில் துவக்க வேண்டும்,' என்றனர்.காரணம் என்ன?பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது;ஏற்கனவே, 10 லட்சம் ரூபாய் செலவில் திட்டமிட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட சமுதாய நலக்கூட கட் டடத்தில், உணவருந்தும் அறை, சமையல் அறை, கழிப்பறை உட்பட வசதிகள் இடம் பெறவில்லை.மாறாக, மணமகன் மற்றும் மணமகள் அறையுடன் கூடிய அரங்கு மட்டுமே அமைக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.அங்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாயக்கூடம் கட்டும் நோக்கில், 67 லட்சம் ரூபாய் செலவில் கட்டுமானப் பணி மேற்கொள்ள திட்ட அறிக்கை பெறப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; அரசு அனுமதி கிடைத்ததும், கட்டுமானப்பணி துவங்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.எனவே, சபாநாயகர் தலையிட்டு, தேவையான நிதி கிடைக்க செய்து, பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X