அவிநாசி:அவிநாசி வட்டார கிராமங்களில், ஆங்காங்கே தேங்கியுள்ள கழிவுநீர் குட்டையை சுத்தப்படுத்தும் பணி, சவாலாக மாறியுள்ளது.அவிநாசி அருகே, மடத்துப்பாளையம், வேட்டுவபாளையம், கருமாபாளையம், சேவூர் அருகே நடுவச்சேரி செல்லும் கிராமப்புற ரோடுகளின் இடையே மழைநீர், கழிவுநீர் கால்வாய் மற்றும் கல்வெர்ட் அமைக்கப்பட்டுள்ளது.குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் ஆகியவை வழிந்தோடி செல்லும் வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், பல இடங்களில் இவை புதர்மண்டி கிடக்கின்றன. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறும் வாய்ப்பு இல்லை; ஆங்காங்கே அடைபட்டு, சுகாதார கேடுக்கு வழி வகுக்கிறது.ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில், ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ஆங்காங்கே புதர் வெட்டுவது, மண் வேலை செய்வது என, சில பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அத்தியாவசிய பணியாக உள்ள கால்வாய் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுவதில்லை. அதேபோல், மடத்துப்பாளையம் உட்பட சில இடங்களில், குட்டை உள்ளது. கழிவுநீர் வழிந்தோடி செல்ல அமைக்கப்பட்ட கால்வாய் அடைப்பட்டு இருப்பதால், கழிவுநீர், அங்குள்ள குட்டையில் ேதங்கி, தண்ணீர் பச்சை நிறத்தில், பாசி படிந்து காணப்படுகிறது.வாழ்விடம் இழக்கும்பறவையினம்கிராமப்புறங்களில், ரோட்டோரம் முழுக்க மரங்களும், செடி, கொடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ளன; தவிர, பெரும் பரப்பில் விவசாய நிலங்களும் உள்ளன.ஆங்காங்கே, குளம், குட்டைகளும் இயற்கையாகவே அமைந்துள்ளன. இதனால், கிராமப்புறங்களில் பல்வேறு பறவையினங்கள் வந்து செல்லும்.பல்லுயிர் பெருக்கத்துக்கு துணை நிற்கும் பறவையினங்கள் குளம், குட்டையில், தங்களுக்கு தேவையான இரையை தேடிக்கொள்வதும், சில நேரங்களில், தங்களின் வாழ்விடத்தையும் அங்கேயே அமைத்துக் கொள்வதும் வழக்கம்.ஆனால், குளம், குட்டைகள் மாசடைந்து இருப்பதால், அவற்றிற்கான வாழ்விடம் பாதிக்கிறது. எனவே, கிராமப்புற சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டியது அவசியம்.