'உதய் எக்ஸ்பிரசை இரவில் இயக்க முடியாது'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2019
05:21

திருப்பூர்:'கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை இரவில் இயக்க வாய்ப்பில்லை' என, சேலம் ரயில்வே கோட்டம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.கடந்தாண்டு ஜூன், 8ம் தேதி கோவை - பெங்களூரு இடையே, உதய் எக்ஸ்பிரஸ், 'டபுள்டெக்கர்' இரண்டு அடுக்கு சொகுசு ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. மினி டைனிங், தானியங்கி உணவு வழங்கும் மெஷின், ஏ.சி., வசதி, 'வை-பை' உட்பட பல வசதிகள் உள்ளன.தினமும் காலை, 5:45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்ட, இந்த உதய் எக்ஸ்பிரஸ் திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களில் நின்று மதியம், 12:40க்கு பெங்களூரு சென்றடைகிறது. இந்த ரயில் புறப்படும் நேரம் காலையாக இருப்பதால், ரயிலை பயணத்துக்கு தேர்வு செய்வதை பலரும் தவிர்க்கின்றனர்.'ரயில் இரவில் கோவையில் இருந்து புறப்பட்டால், ஓய்வெடுத்தபடி பயணிக்க ஏதுவாக இருக்கும். எனவே, உதய் எக்ஸ்பிரஸை இரவில் இயக்க வேண்டும்' என பயணிகள் வலியுறுத்தினர். ஆனால், இரவில் இயக்க சாத்தியமில்லை என தெற்கு ரயில்வே சேலம் கோட்ட உயரதிகாரிகள் கைவிரித்துள்ளனர்.சேலம் ரயில்வே கோட்ட உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,'உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றடையும் பெங்களூரு மெயின் ரயில்வே ஸ்டேஷனில் ஏற்கனவே, நுாற்றுக்கும் அதிகமான ரயில்கள் தினமும் பராமரிக்கப்படுகின்றன. 'தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள், பிளாட்பாரங்களில் நிற்க இடமில்லாத சூழல் உள்ளது. உதய் எக்ஸ்பிரசை இரவில் இயக்கினால், பராமரிப்பு முடிந்து பின் தான் பெங்களூருவில் இருந்து அனுப்ப வேண்டும். கோவையில் பராமரிப்பு செய்ய வழியில்லை. எனவே, உதய் எக்ஸ்பிரஸ் இரவில் இயங்க சாத்தியமில்லை' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X