மக்கள் வரிப்பணம் ரூ.1 கோடி... 'ஸ்வாகா!' உலகத்தர நடைபாதை இடிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2019
06:21

ராயப்பேட்டை: ராயப்பேட்டை, பட்டுல்லாஸ் சாலையில், 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட, உலகத்தர நடைபாதையை, இரண்டரை ஆண்டிற்குள் மாநகராட்சி இடித்துள்ளது.தேனாம்பேட்டை மண்டலம், ராயப்பேட்டை, பட்டுல்லாஸ் சாலையில், பேருந்து பணிமனை, மால், தனியார் நிறுவனங்கள் உள்ளன.வீண் செலவுஅண்ணா சாலை ஒருவழிப் பாதையாக இருப்பதால், எழும்பூரில் இருந்து, கிண்டி மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள், இச்சாலையை பயன்படுத்துகின்றன. இதனால், எப்போதும் இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். சென்னை மாநகராட்சி, உலகத்தர நடைபாதை அமைத்த போது, பட்டுல்லாஸ் சாலையிலும், திட்டத்தை செயல்படுத்தியது.மின்வடம், தொலைதொடர்பு நிறுவனங்களின் வடங்கள் செல்ல, 'டக்ட்' என்ற தனி பாதையுடன் கூடிய, உலகத்தர நடைபாதை, 2015ல், 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.இந்த நடைபாதையை, மாநகராட்சி தற்போது இடித்துவிட்டு, அங்கு, 80 லட்சம் ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது.இது குறித்து, சமூகஆர்வலர்கள் கூறியதாவது:பட்டுல்லாஸ் சாலையில், 2015ல் அமைக்கப்பட்ட உலக தர நடைபாதையை இடித்துவிட்டு, மழைநீர் வடிகால் அமைத்து வருகின்றனர்.தொடரும்:


இச்சாலையில், ஒரு புறம் மழைநீர் வடிகால் உள்ளது; அதையே அகலப்படுத்தி இருக்கலாம்.உலக தர நடைபாதையை இடித்ததால், வடங்கள் வெளியே கிடக்கின்றன. இதனால் அடுத்தடுத்து, சேவை நிறுவனங்களால், பட்டுல்லாஸ் சாலை தோண்டப்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.மீண்டும்... மீண்டும்!


சென்னையில், 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, பட்டுல்லாஸ் சாலையில் வெள்ளம் வாரக்கணக்கில் தேங்கியது. சாலை, நடைபாதையை வெட்டி, தேங்கிய மழைநீரை மாநகராட்சி வெளியேற்றியது.இது குறித்து, நமது நாளிதழில் விரிவான கட்டுரை வெளியிடப்பட்டது. இதையடுத்து, அங்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகளில், மீண்டும் மழைநீர் வடிகால் அமைக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thyagavel - Pondicherry,இந்தியா
18-ஜன-201902:59:43 IST Report Abuse
Thyagavel எந்த சிவில் ஒர்க் ஆர்டர் ரிலீஸ் பண்ணினாலும் கமிஷன் 40 %. அதனால காட்டும் பொது 40 %, இடிக்க 40 %, திரும்ப கட்ட 40 % . எந்த கமிஷன் அதிகாரிங்க ஐடியா பண்ணுவாங்க, செஞ்சி முடிச்சிட்டு, கட்சி பாகு பாடின்றி பிரிச்சிக்குவாங்க. ஒரு காட்சிக்கூட விதிவிலக்கு கிடையாது. எப்போ அதன் பிரச்னையே. நாம யாருகிட்டயும் போய் முறையிட முடியாது. அதிகாரிங்க தப்பு செஞ்ச அரசியல் வாதிக்கிட்ட சொல்லலாம், அதே போல அரசியல்வாதி தப்பு செஞ்ச அதிகாரிங்க கிட்ட சொல்லலாம், ரெண்டு பெரும் கூட்டு சேந்துட்டாங்க. ஒன்னும் பண்ண முடியல. பத்திரிக்கை காரங்க மட்டும் சும்மா இல்லிங்க, காஜா புயல் பாதிப்புகளை பணத்தை வாங்கிகிட்டு ஒளி பரப்ப மறுத்தவங்கதான் அவுங்களும். "பத்திரிக்கை கரண் கல்யாண வீட்டுல சாவு விழுதான்னு பாக்குற புத்தி உள்ளவங்க. இந்த கூற்றை எந்த பத்திரிக்கையும் மறுக்க முடியாது [தார்மிகமாக] It is time that general public should start putting RTI and collect these information. then it has to be circulated thru social media.
Rate this:
Share this comment
Cancel
A R J U N - PHOENIX ....ARIZONA..,யூ.எஸ்.ஏ
18-ஜன-201902:19:49 IST Report Abuse
A R J U N இதென்ன பிரமாதம்..கீழ்கட்டளை terminus கட்டியமைக்கு 5 கோடி செலவாம்.. asbestos sheet 20 தூண்கள் 20 அம்புட்டுதான்..
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-ஜன-201918:10:18 IST Report Abuse
Lion Drsekar கொள்ளையர்களின் கைகளில் ஜனநாயகம் , நீதிமன்றம் தானாக முன்வந்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X