வால்பாறை:வால்பாறை அருகே யானைகள் மூன்று வீடுகளை் சேதப்படுத்தியதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. சின்கோனா (டான்டீ) கீழ்நீராறு அணைப்பகுதியில் முகாமிட்ட நான்கு யானைகள், நேற்று முன்தினம் அதிகாலை அங்குள்ள முனியாண்டி, முத்துகிருஷ்ணன், கருப்புசாமி ஆகிய மூன்று தொழிலாளர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்தியது. அதன் பின், அவ்வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தன. பகல் முழுவதும் அதே பகுதியில் யானைகள் முகாமிட்டதால் வாகன ஓட்டுனர்கள் தவித்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'யானைகள் நடமாடும் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை. யானைகள் நடமாடும் பகுதிகளில், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.