டிஜிட்டல் டிஸ்பிளே போர்டுகளால் ஒரு விளம்பரம் தான்...! மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

18 ஜன
2019
02:21
பதிவு செய்த நாள்
ஜன 18,2019 02:15

கோவை:காற்று மாசு, ஒலி மாசு மற்றும் மாநகராட்சி அறிவிப்புகளை வெளியிடுவதற்காக, கோவையில் அமைக்கப்பட்டுள்ள, 'டிஜிட்டல் டிஸ்பிளே போர்டு'களில் விளம்பரங்கள் ஒளிபரப்ப, அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.



'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில திட்டங்களுக்கு மாநகராட்சி தொகை ஒதுக்காமல், ஒப்பந்த நிறுவனங்களே தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ள அனுமதி அளிக்கிறது.



அதுபோன்ற தருணங்களில், வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதுவே தற்போது முறைகேடுக்கு வழிவகுக்கிறது.

இவ்வாறு விளம்பர பலகை வைத்து வருவாய் ஈட்டுவதில், சில நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இது போன்ற விளம்பரங்களால், மாநகராட்சிக்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை என்றாலும் இதை பற்றியெல்லாம், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.



'டிஜிட்டல் டிஸ்பிளே போர்டு'



இந்நிலையில், மாநகர எல்லைக்குள் முக்கியமான, 30 இடங்களில், காற்று மாசு மற்றும் ஒலி மாசு, மாநகராட்சி அறிவிப்புகளை வெளியிடுவதற்கு, 'டிஜிட்டல் டிஸ்பிளே போர்டு' வைக்க முடிவு செய்யப்பட்டது.தாமாக முன்வந்த தனியார் ஒப்பந்த நிறுவனம், தங்களது சொந்த செலவில் அனைத்து இடங்களிலும் அமைத்து, விளம்பரம் செய்து கொள்ள அனுமதி கோரியது. அதன் பேரில், உக்கடம், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், வடகோவை, டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு, அவிநாசி ரோடு கே.எம்.சி.எச்., மற்றும் பன்மால் அருகில் உள்ளிட்ட, 15 இடங்களில், 'டிஜிட்டல் போர்டு' வைக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி கமிஷனர் பெயரில், மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. மேலும் 15 இடங்களுக்கான கோரிக்கை, பரிசீலனையில் உள்ளது.




20 ஆண்டுக்கு ஒப்பந்தம்



'டிஜிட்டல் டிஸ்பிளே போர்டு'களில் செய்யப்படும் விளம்பரங்களின் வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை, மாநகராட்சி செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிப்பது வழக்கம். மாறாக, ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் செலுத்த வேண்டும் என கூறி, 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.



மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தனியார் நிறுவனம், சொந்த செலவில் 'டிஸ்பிளே போர்டு' அமைத்துள்ளது. ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் மாநகராட்சிக்கு செலுத்தும். காற்று மாசு, ஒலி மாசு மற்றும் மாநகராட்சி அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன' என்றனர்.




டெண்டரே இல்லாமல், விருப்பத்தின் அடிப்படையில், சைக்கிள் பகிர்வு திட்டத்தை செயல்படுத்திய, 'ஓபோ' நிறுவனம், பல்வேறு இடையூறுகளை சந்தித்து, கோவையில் இருந்து ஓட்டம் பிடித்தது. பல்வேறு நிறுவனங்கள் சைக்கிள் பகிர்வு திட்டத்தை தொடர முன்வந்தாலும், கூடுதல் வருவாய் ஈட்டிக் கொடுக்க, சைக்கிளில் விளம்பர பலகை வைத்துக் கொள்ள அனுமதிக்கலாமா என உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.



ஒரு சின்ன கணக்கு!



ஒரு 'டிஜிட்டல் போர்டில்' தனியார் நிறுவன விளம்பரம் செய்ய, லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்சமாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருவாய் என கணக்கிட்டால், ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்; 20 ஆண்டுகளுக்கு ரூ.2.40 கோடி கிடைக்கும். 30 இடங்களுக்கு, ரூ.72 கோடி. இதில், மாநகராட்சிக்கு கொடுக்கும் பங்கு ஆண்டுக்கு, ஒரு போர்டுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் கணக்கிட்டால், 30 இடங்களுக்கு சேர்த்து, 18 லட்சம் ரூபாய்; 20 ஆண்டுகள் முடிவில் கிடைப்பது வெறும் ரூ.3.6 கோடி மட்டுமே.



குறைந்தபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என கணக்கிட்டாலே, தனியார் நிறுவனத்துக்கு ரூ.72 கோடி கிடைக்கும். இந்த வருவாயில் பங்கு பெறாமல், தோராயமாக கணக்கிட்டு, ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் என கணக்கிட்டு, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர். இதை தவிர்க்க, விளம்பர வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை, மாநகராட்சி பங்காக பெற்றால் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஜன-201904:26:43 IST Report Abuse
Bhaskaran அதிகாரிகளின் போக்கெட்டுகளுக்கு போகும் பணத்தை கணக்கிட்டால் கணக்கு எல்லாம் சரியாகத்தான் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X