10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு...!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜன
2019
02:18

கோவை:கோவை, சிங்காநல்லுாரில் உள்ள சாந்தி சமூக சேவை மையத்தில் உள்ள கேன்டீனில், ரூ.5க்கு டிபன் வகைகளும், ரூ.10க்கு மதிய சாப்பாடும் வழங்குவது, ஏழை எளிய மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


கோவையில், 'சாந்தி கியர்ஸ்' என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் சுப்ரமணியம், சாந்தி சமூக சேவை அறக்கட்டளை உருவாக்கி, அதன் கீழ், மருத்துவமனை மற்றும் குறைந்த கட்டணத்தில், ஏழை எளிய மற்றும் வசதியற்ற மக்களுக்கு, உயர்தர சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார். இது சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வெளியூரை சேர்ந்த மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.


சிகிச்சை பெற வருவோரும், உடன் தங்கியிருப்போரும், உணவுக்காக பல நுாறு ரூபாய் செலவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதை உணர்ந்து, குறைந்த தொகைக்கு உணவளிக்கும் வகையில் உணவகம் ஏற்படுத்தினார்.காலை மற்றும் இரவு வேளையில், டிபன் மற்றும் மதிய வேளையில் முழு சாப்பாடு வழங்கப்படுகிறது. 'கியூ'வில் சென்று சாப்பிடும் அளவுக்கு, மக்களிடம் நன்கு வரவேற்பு ஏற்பட்டது.

கேன்டீனில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டு உள்ளது; ஒருமுறை மட்டும் பயன்படுத்தி, துாக்கி எறியக்கூடிய பொருட்கள் பயன்படுத்துவதில்லை. சில்வர் தட்டில் உணவு வழங்கினாலும், உடனுக்குடன் சுத்தமாக கழுவி, பயன்படுத்தப்படுகிறது.

தள்ளுமுள்ளு இல்லாமல், பொதுமக்கள் வரிசையாக சென்று உணவருந்துகின்றனர். மூத்த குடிமக்கள் மற்றும் சீருடையுடன் வரும் மாணவ, மாணவியருக்கு இலவசமாகவும் வழங்கப்படுகிறது.


இங்கு வழங்கப்படும் உணவு விலை குறைவாக இருந்த போதிலும், மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று டிபன் வகைகள் ரூ.5க்கும், மதிய சாப்பாடு ரூ.10க்கும் வழங்கப்பட்டது. வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தி, பூரி, இட்லி, உளுந்து வடை, பில்டர் காபி என, எது வாங்கினாலும், 5 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது.


இதுநாள் வரை, ரூ. 20க்கு வழங்கப்பட்ட மதிய சாப்பாடு, 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது; மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் ஜி.எஸ்.டி., வரியும் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது, ஏழை எளிய மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
18-ஜன-201918:25:18 IST Report Abuse
Ram வயிறு நிறைய உண்டுவிட்டு பிரியப் பட்டால் உண்டியலில் பணம் போடலாம், இல்லை மனதில் வாழ்த்திவிட்டு வந்தால் அது அன்னலெட்சுமி உணவகம் (துடியலூர்) இப்போதும் இருக்கிறதா? சாந்தி கியர்ஸ் பற்றி கோவை வாழ் மக்களுக்கு நன்றாக தெரியும். மேலும் இவர்கள் நடத்தும் எரிபொருள் நிரப்பு மையம் கலப்படம் இல்லாமல் தரமாக இருக்கிறது என்பது மக்களின் நம்பிக்கை. உங்களின் சேவை அனைவருக்கும் தேவை. வாழ்த்துக்கள்!
Rate this:
Share this comment
Cancel
தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா
18-ஜன-201914:59:41 IST Report Abuse
தம்பி இங்கு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினால் தெரியும் இதன் லட்சணம்
Rate this:
Share this comment
18-ஜன-201917:50:43 IST Report Abuse
ஜுவாஅப்டிங்களா பாரி வள்ளளே.....
Rate this:
Share this comment
Cancel
18-ஜன-201913:28:56 IST Report Abuse
ஸாயிப்ரியா ஏழைகள் நடுத்தர வர்கத்தினர் வயிறார வாழ்த்துவர்.தொடரட்டும் சேவை. பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X