-ஓ.எம்.ஆர்., - ஈ.சி.ஆர்., இணைப்புக்காக, துரைப்பாக்கத்தில், 1.5 கி.மீ., துாரத்திற்கு, புதிய இணைப்பு சாலை அமைக்க, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.
தென்சென்னையில், கிழக்கு கடற்கரை சாலையான, ஈ.சி.ஆர்., மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையான, ஓ.எம்.ஆர்., முக்கிய சாலைகளாக உள்ளன.வழி குறைவுஇந்த இரண்டு சாலைகளும், சென்னையின் நுழைவுவாயில் போல் உள்ளன.
ஆனால், ஓ.எம்.ஆர்., - ஈ.சி.ஆர்., சாலைகளுக்கு இடையே, பக்கிங்ஹாம் கால்வாய் இணையாக பயணிப்பதால், இந்த இரண்டு சாலைகளுக்கும், இணைப்பு குறைவாகவே உள்ளது.சென்னை மற்றும் புறநகரில் இருந்து செல்லும் வாகனங்கள், ஓ.எம்.ஆரில் இருந்து, தரமணி சிக்னல், திருவான்மியூர் வழியாகவும், சோழிங்க நல்லுார் சந்திப்பில் இருந்து, கலைஞர் கருணாநிதி சாலை வழியாகவும் மட்டுமே, ஈ.சி.ஆர்., செல்ல முடியும்.சோழிங்கநல்லுார் சந்திப்பை விட்டால், கேளம்பாக்கம் சந்திப்பில் இருந்து, ஈ.சி.ஆர்., செல்ல, கோவளம் இணைப்பு சாலை உள்ளது.
சென்னை மாநகராட்சி எல்லையில், ஓ.எம்.ஆர்., - ஈ.சி.ஆர்., சாலைகளை இணைக்க, இரண்டு இடங்களில் மட்டுமே இணைப்பு உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன், ஓ.எம்.ஆரில் நெரிசலும் அதிகரித்து வருகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஈ.சி.ஆருக்கு துரிதமாக செல்லவும், ஓ.எம்.ஆரில் நெரிசலை குறைக்கவும், பல்லாவரம்- - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை, ஈ.சி.ஆருடன் இணைக்க, நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
திட்டம்தற்போதுள்ள பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை, 10.6 கி.மீ., துாரம் கொண்டது. இந்த சாலை, ஓ.எம்.ஆரில் உள்ள, துரைப்பாக்கம் சிக்னலுடன் முடிவடைகிறது.இதில் இருந்து நேராக, ஈ.சி.ஆரில் இணைக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, 1.5 கி.மீ., துாரத்தில், புதிதாக இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது.தற்போதுள்ள ரேடியல் சாலை, 200 அடி அகலம் கொண்டது. புதிதாக அமைய உள்ள இணைப்பு சாலை, 100 அடி அகலத்தில் இருக்கும். துரைப்பாக்கம் சிக்னலில் இருந்து, இணைப்பு சாலை திட்டம் துவங்குகிறது.சாலைக்காக, சிக்னலை ஒட்டி உள்ள, துரைப்பாக்கம் அரசு துவக்கப்பள்ளி, முழுவதுமாக இடிக்கப்பட உள்ளது. மாற்றாக, அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சக்தி குழுமம் சார்பில், 1 கோடி ரூபாயில், 16 வகுப்பறை கொண்ட, துவக்கப் பள்ளி கட்டடம் கட்டப்படுகிறது.
மேலும், தனியார் இடம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக சாலை இணைக்கப்படுகிறது. நிலம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள், சாலை இணைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ரேடியல் சாலை-, இ.சி.ஆர்., இணைப்பு மூலம், குறிப்பிட்ட பகுதியில் இருந்து, புதுச்சேரி நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள், துரிதமாக செல்ல முடியும். ஓ.எம்.ஆரில், 40 சதவீதம் நெரிசல் குறையும். நிலம் எடுப்பு, சாலை எல்லை நிர்ணயம், மதிப்பீடு தயாரிப்பு பணி நடக்கிறது. பார்லிமென்ட் தேர்தல் முடிந்ததும், சாலை பணி துவக்கப்படும்.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்ரேடியல் சாலை பெயர் மாற்றம்தற்போது, துரைப்பாக்கம் சிக்னலுடன் ரேடியல் சாலை முடிவதால், 'பல்லாவரம் - -துரைப்பாக்கம் ரேடியல் சாலை' என, தற்போது இச்சாலை அழைக்கப்படுகிறது. இணைப்பு சாலை பணி முடிந்ததும், 'பல்லாவரம் - -ஈ.சி.ஆர்., சாலை' என அழைக்கப்படும். அதோடு, தற்போது, 10.6 கி.மீ., உள்ள ரேடியல் சாலை, இணைப்புக்கு பின், 12 கி.மீ., துாரமாக அதிகரிக்கும்
நமது நிருபர்-