அலட்சியத்தால் வீணாகும் உன்னத திட்டம்: பராமரிப்பின்றி காயும் மரக்கன்றுகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜன
2019
23:52

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கிராமப்பகுதிகளில், ரோட்டோரம் நடப்பட்ட மரக்கன்றுகள், எவ்வித பராமரிப்புமின்றி காய்ந்து வீணாகி வருகின்றன.பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரோட்டோரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மரக்கன்றுகள், பாதுகாப்பு அரண்கள் வாங்கப்படுகின்றன. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் மூலம் ரோட்டோரங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.


பசுமை, நிழல் மற்றும் பறவைகளின் வாழிடங்களை அதிகரிக்கவும், மழையின்மையை போக்கவும், காற்று மாசை குறைத்து, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த உன்னதமான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணியில் ஈடுபடும் வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு ஒரு நாளைக்கு, 224 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.இத்தனை செலவழித்து மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை, அதிகாரிகளும் அறிவதில்லை, உள்ளாட்சி நிர்வாகிகளும் அறிவதில்லை என்பது வேதனையளிப்பதாக உள்ளது.கடமைக்காக ரோட்டோரம் நட்டு விடப்பட்ட மரக்கன்றுகளை அதன் பிறகு அவர்கள் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.


இதனால், ஆடு, மாடுகள் கடித்தோ, வறட்சியாலோ பெரும்பாலான மரக்கன்றுகள் பட்டுப்போய் வீணாகின்றன. பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் இது போல ஆயிரக்கணக்கான பட்டுப் போன மரக்கன்றுகளை காண முடிகிறது.இத்தகைய அலட்சியப் போக்கால், திட்டத்தின் நோக்கம் அர்த்தமிழப்பதுடன், மக்களின் வரிப் பணமும் வீணடிக்கப்படுகிறது. மரக்கன்று நடும் திட்டத்தில், குறிப்பிட்ட காலம் வரை பராமரிப்பு பணியை மேற்கொள்வதையும் உட்புகுத்த, ஊரக வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X