இந்த வாரம்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஜன
2019
02:05

ஜன., 21: கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம்பாரம்பரியகலைகள் பழந்தமிழரின், வாழ்வியலோடு இணைந்திருந்தது. அந்த வகையில், கொங்கு மக்களின் புகழ் போற்றும், தொல் நடனக்கலை 'உள்ளி விழவு' எனும் பெருஞ்சலங்கை ஆட்டம், தீரன் சின்னமலை விளையாட்டு மையம் சார்பில், மாலை, 3:30 மணிக்கு நடக்கிறது.

ஜன., 21: இயற்கை வள பாதுகாப்புஇயற்கை வளங்களை பாதுகாக்க, சுற்றுசூழல் மற்றும் நீர்வளத்தில் அதிகரிக்கும் மாசுபாட்டை தடுக்க வேண்டும். மூலக்கூறு தொழில்நுட்பவியல் மூலம், மாசுபாட்டு காரணிகளை தடுப்பது குறித்து பி.எஸ்.ஜி., அட்வான்ஸ் ஸ்டடிஸ் கல்லுாரி சார்பில், சர்வதேச பயிலரங்கு நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு பயிலரங்கு துவங்கும்.

ஜன.,23: விவேகானந்தர் சிலை திறப்புமனதை ஒருமுகப்படுத்துவதே, கல்வியின் அடிப்படை இலக்கு என்றார் சுவாமி விவேகானந்தர். இந்தியாவின் பன்முகத்தன்மையை உலகறியச்செய்ய, விவேகானந்தரின் திருவுருவச்சிலை குமரகுரு தொழில்நுட்பக்கல்லுாரி வளாகத்தில் திறக்கப்படுகிறது. காலை, 9:30 மணிக்கு துவங்கும் விழாவில், மாணவ, மாணவியர் சிலையை திறந்து வைக்கின்றனர்.

ஜன., 25: திறமைக்கான களம்டி.ஜே.அகாடமி மேலாண்மைக் கல்லுாரி சார்பில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறை மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி நடக்கிறது. மதியம், 2:00 மணியளவில் நடக்கும் போட்டியில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு, ரொக்கப் பரிசுகள் உண்டு. பங்கேற்பு கட்டணம் இல்லை. திறமையை வெளிப்படுத்துவதற்கான களத்தை, மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.



ஜன., 26: கேக் செய்யலாம்கொண்டாட்டங்களையும் இனிக்கச் செய்யும் கேக்குகளை, வண்ண அலங்காரங்களில், புது வடிவங்களில் வீட்டிலேயே செய்து கொடுத்தால், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோர் மனதிலும் தனி இடம் பிடித்து விடலாம். 'கேக் மை டே' சார்பில், கேக் தயாரிப்பு பயிலரங்கு, காலை, 11:00 மணி முதல் நடக்கிறது.



ஜன., 26: பேஷன் இல்லஸ்ட்ரேஷன்ஆடை வடிவமைப்பு துறை மாணவர்களுக்கு, 'பேஷன் இல்லஸ்ட்ரேஷன்' அடிப்படையானது. மெட்டிகுலேஸ் ஈவென்ட்ஸ் சார்பில், ' பேஷன் இல்லஸ்ட்ரேஷன்' குறித்து, சிறப்பு பயிலரங்கு நடக்கிறது. ஆடை வடிவமைப்பு துறையில், கற்பனைத்திறனை மேம்படுத்த விரும்புவோர், பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.



ஜன., 27: வைகறை திருவிழாகவிதை புகழ் பாடும் கவிஞனை காலம் போற்றும். கவிஞர்கள் இணைந்து, கவியை போற்றும் நிகழ்வு, நாளெல்லாம் நமக்கு நல்விருந்தாய் அமையும். கோவை வசந்தவாசல் கவிமன்றம் சார்பில், வைகறை திருவிழா நடக்கிறது. காலை, 9:30 முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கும் விழாவில், மனிதநேய பண்பாளர் விருது, கவிதைத் தொகுப்பு நுால் வெளியீடு உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.



 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X