கிண்டி காவல் நிலைய சாலையில் 'நோ என்ட்ரி!'  முட்டுக்கட்டை போடும், 'சிட்கோ'-
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 ஜன
2019
02:45
பதிவு செய்த நாள்
ஜன 21,2019 02:06

-மாநகர பேருந்துகள் பயன்படுத்தி வந்த, 200 அடி நீள, கிண்டி காவல் நிலைய சாலையை, 'சிட்கோ' நிர்வாகம் திடீரென அடைத்ததால், கிண்டி தொழிற்பேட்டை வளாகமே, போக்குவரத்து நெரிசலில் திக்குமுக்காடி வருகிறது.கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில், மின்சார ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது.இங்கிருந்து, கோயம்பேடு வழியாக, செங்குன்றம், மணலிக்கும்; வேளச்சேரி வழியாக செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை வழியாக அண்ணா சதுக்கத்திற்கும், நேரடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில், 75 பேருந்துகள், 810 முறைகள், கிண்டிக்கு வந்து செல்கின்றன. ஒவ்வொரு முறையும், 5 முதல், 10 நிமிடம் வரை, பேருந்துகள் நிலையத்தில் நிற்கும்.கோயம்பேட்டில் இருந்து, வேளச்சேரி, திருவான்மியூர், கேளம்பாக்கம், சிறுசேரிக்கு, 10 நிமிடத்திற்கு, ஒரு பேருந்து வீதம் இயக்கப்படுகிறது. இவை, கிண்டியில் நின்று செல்லும்.மேலும், தாம்பரம், பூந்தமல்லி மார்க்கத்தில் இருந்து, தி.நகர், பாரிமுனை, அடையாறுக்கு, நிமிடத்திற்கு ஒரு பேருந்து வீதம் இயக்கப்படுகிறது.
இவை, கிண்டியில் நின்று செல்லும்.ரயில் கட்டணம் மிக குறைவாக இருப்பதால், பேருந்தில் கிண்டி சென்று, அங்கிருந்து ரயிலில் பயணிப்போர் அதிகம். துரித பயணத்திற்கும், இதே வழிமுறையை பயன்படுத்துவர்.இதனால், கிண்டி பேருந்து நிலையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பேருந்து நிலையம் கோயம்பேடு மாநகர பேருந்து நிலையம் போல், கிண்டியும் எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஆனால், கோயம்பேட்டை போல் ஏக்கர் பரப்பளவில், சுற்றளவு கொண்ட பேருந்து நிலையமாக, கிண்டி இல்லை. மாறாக, 40 அடி அகலம், 450 அடி நீளம் சாலை வடிவில் தான், பேருந்து நிலையம் அமைந்துள்ளது இதில், பாரிமுனை, தி.நகர் நோக்கி செல்லும் பேருந்துகளுக்கு, 150 அடி நீளம்; அடையாறு நோக்கி செல்ல, 100 அடி நீளம்; வேளச்சேரி நோக்கி செல்ல, 150 அடி நீளம் மற்றும் புதுச்சேரி செல்லும் பேருந்துகளுக்கு, 50 அடி நீளம் என, சாலை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குறுகிய இடத்தில் தான், அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும்சாலை அடைப்பு கோயம்பேடு வழியாக, கிண்டி வரை மட்டும் இயக்கப்படும் பேருந்துகள், ஈக்காட்டுதாங்கல், சிப்பெட் சாலை வழியாக, பேருந்து நிலையம் வரும். அங்கிருந்து, கோயம்பேடு நோக்கி இயக்கும்போது, கிண்டி காவல் நிலைய சாலை வழியாக திரும்பிச் செல்லும்
 ஓட்டுனர், நடத்துனர் ஓய்வு நேரத்திற்கும், பயணியர் சாவகாசமாக ஏறவும், ஆலந்துார் சாலையில், பேருந்துகள் நிறுத்தப்படும். இதனால், பயணியர் சிரமம் இல்லாமல் பேருந்தில் ஏறினர். வாகன நெரிசலும், கட்டுக்குள் இருந்தது


 இரண்டு வாரங்களுக்கு முன், பேருந்துகள் செல்லாத வகையில், காவல் நிலைய சாலையை, சிட்கோ நிர்வாகம் அடைத்தது


 அதன்பின், சிப்பெட் வழியாக வந்த பேருந்துகளை, ஈக்காட்டுதாங்கல், கத்திப்பாரா மேம்பால அணுகு சாலை வழியாக, கிண்டி பேருந்து நிலையம் செல்ல அறிவுறுத்தப்பட்டது


 இந்த பேருந்துகள், பாரிமுனை நோக்கி செல்லும் பேருந்துகள் நிற்கும் தடமான, 150 அடி நீள சாலையின், வலது பக்கத்தில் நிற்க, இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது


 பல நேரத்தில், போக்குவரத்து நெரிசல் காரணமாக, அடுத்தடுத்து பேருந்துகள் என, வரிசையாக வரும். அப்போது, 150 அடி நீளத்தை கடந்து, அண்ணா சாலை வரை பேருந்துகள் காத்து நிற்கின்றன. இதனால், கத்திப்பாரா மேம்பாலம் வரை, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது


 மேலும், கத்திப்பாராவில் இருந்து சிட்கோ வளாகம் மற்றும் மேற்கு சைதாப்பேட்டை நோக்கி செல்லும் இதர வாகனங்கள், பாரிமுனை நோக்கி செல்லும் பேருந்துகள் நிற்கும் சாலை வழியாக செல்கின்றன


 இந்த சாலையில் இருபக்கத்திலும், பேருந்துகள் நிற்பதால், குறுகிய இடத்தில், இதர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டி உள்ளது. இதே சாலையில், பாதசாரிகளும் சாலையை கடப்பதில், பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்


 மேலும் நெரிசலால், பயணியரை ஏற்ற நிற்கும் பேருந்துகளை, அவசரகதியாக இயக்க, நிர்ப்பந்தம் ஏற்படுவதால், ஏறும்போது பயணியர் படியில் தடுக்கி விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது


 கிண்டி காவல் நிலைய சாலை, 50 அடி அகலம், 100 அடி நீளம் கொண்டது. இதே சாலையில், காவல் நிலையம் மற்றும் சிட்கோ அலுவலகம் ஆகியவை உள்ளன இந்த, 100 அடி நீள சாலையில், பேருந்துகளை இயக்க அனுமதி மறுப்பதால், ஈக்காட்டுதாங்கல், அண்ணாசாலை, கத்திப்பாரா மேம்பாலம் என, நெரிசல் வரிசை கட்டுகிறது


 கிண்டி காவல் நிலைய சாலையில், தடுப்பு அமைக்க, போலீசார் உடன்படவில்லை. பிரச்னை அதிகரிக்கும் என, கிண்டி ஆய்வாளர், எவ்வளவோ எடுத்துக் கூறியும், சிட்கோ நிர்வாகம் தடுப்பு அமைப்பதில் உறுதி காட்டியது


 சிட்கோ அலுவலகம் முன், ஷேர் ஆட்டோக்கள், லாரிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அவர்களை, அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற, சிட்கோ நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, மாநகர பேருந்துகள் செல்வதை தடை செய்துள்ளனர்தடுப்பை அகற்றினால் தான், போக்குவரத்து நெரிசலை குறைந்து, பயணியர் சிரமமின்றி பயணிக்க முடியும். இதற்கு, சிட்கோ மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.நான், மணலியில் உள்ள, ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். தினமும், தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து, பேருந்தில் பயணிப்பேன். ஆலந்துார் சாலையில், பேருந்துகள் வரிசையாக நின்றபோது, சிரமமில்லாமல் ஏற முடிந்தது. தற்போது, கண்ட இடங்களில் நிறுத்துவதால், பேருந்தை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. பல நேரம், வழக்கமாக செல்லும் பேருந்தை தவற விடுகிறோம். எங்கள் சிரமங்களையும், சிட்கோ உணர வேண்டும்.என்.செல்வம், 42, கிண்டி.கத்திப்பாரா அணுகுசாலை வழியாக வரும்போது, பேருந்து நிறுத்த இடம் கிடைப்பதில்லை. நெரிசலில் சிக்கி தவிக்கிறோம். காலதாமதம் ஏற்படுவதால், பேருந்தை நிறுத்தி வைக்க முடியாமல், பயணியரை ஏற்றி செல்ல வேண்டி உள்ளது. இறங்கி, சில நிமிடம் ஓய்வு எடுக்க முடியவில்லை. பேருந்து இன்ஜினுக்கும் ஓய்வும் கிடைப்பதில்லை. காவல் நிலைய சாலையை திறந்தால் தான் விடிவு.மாநகர பேருந்து ஓட்டுனர்கள்சிட்கோ அலுவலகத்தை ஒட்டி, ஷேர் ஆட்டோ, வேன் மற்றும் லாரி ஓட்டுனர்கள் சங்க பலகை வைத்து, வாகனங்களை நிறுத்துகின்றனர். இதை, அனுமதித்ததே, சிட்கோ நிர்வாகம் தான். மாநகராட்சி பகுதியை போல், இங்கு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அவர்களை முறைப்படுத்தி, இடமாற்றம் செய்து நிறுத்த, சிட்கோ தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம். தடுப்பை அகற்றினால், பேருந்து பயணியருக்கு பயன் அளிக்கும்.கிண்டி காவல் நிலைய போலீசார்கிண்டி காவல் நிலைய சாலையை மூட, ஷேர் ஆட்டோக்கள், லாரிகள் தான் காரணம். கண்ட இடத்தில் நிறுத்தி, இடையூறு செய்கின்றனர். சில போலீசார் பணம் வாங்கிக்கொண்டு, வெளி வாகனங்களை இங்கு நிறுத்த அனுமதிக்கின்றனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், சாலை ஓர காலி இடங்களை ஆக்கிரமித்து, ஒர்க் ஷாப் நடத்துகின்றனர். சட்டவிரோதமாக நிறுத்தும் வாகனங்களை, அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். போலீசார் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.சிட்கோ அதிகாரிகள்இது நியாயமா, 'ஆபீசர்!'இரண்டு வாரங்களுக்கு முன், சிட்கோ நிர்வாக மேலாண்மை இயக்குனர், அபூர்வா, காரில் அலுவலகம் வந்தார். உள்ளே நுழைய முடியாத வகையில், நுழைவாயில் சாலையில், சில லாரிகள் இடையூறாக நின்றன. இயக்குனர் அபூர்வாவின் கார் ஓட்டுனர், ஹாரன் அடித்தும், லாரிகளை நகர்த்தவில்லை. தொடர்ந்து ஹாரன் அடித்ததால், ஒரு லாரி ஓட்டுனர், கார் ஓட்டுனரை ஒருமையில் பேசி உள்ளார்.இதைக்கண்ட காரில் இருந்த அபூர்வா கோபமடைந்தார். அலுவலகம் சென்று, கீழ் அதிகாரிகளை அழைத்து, லாரிகள் வரமுடியாத வகையில், அவசரமாக தடுப்பு அமைக்க உத்தரவிட்டார்.ஒரு அதிகாரியாக, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய, லாரிகளை மடக்கி, போலீசில் ஒப்படைத்திருக்கலாம்; அல்லது அங்கு நிறுத்த தடை விதித்து, வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தி இருக்கலாம். மாறாக, மாநகர பேருந்துகள் செல்ல முடியாத வகையில், சாலையை அடைத்தது எந்த வகையில் நியாயம் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.-நமது நிருபர்- 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Chennai,இந்தியா
21-ஜன-201914:22:06 IST Report Abuse
Sathish இருந்த ஒரு உருப்படியான வழியும் மூடிட்டாங்களா
Rate this:
Cancel
thiru - Chennai,இந்தியா
21-ஜன-201912:23:39 IST Report Abuse
thiru சிட்கோவில் ஷேர் ஆட்டோ லாரிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது.. சிட்கோ எடுத்த முடிவு வரவேற்க தக்கது..
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஜன-201909:24:03 IST Report Abuse
Srinivasan Kannaiya சிட்கோ நிர்வாக மேலாண்மை இயக்குனர் சிட்கோவையே தனது சொந்த உடைமையாக நினைத்த அந்த நிர்வாக மேலாண்மை இயக்குனரிம் மடமையை என்னவென்று சொல்லுவது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X