திருப்பூர்:புதிய தொழில்நுட்பம் குறித்து செயல் விளக்கமளிக்க, பஞ்சாப் குழுவினர், திருப்பூர் வருகின்றனர்.திருப்பூரில், 18 சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு மையங்கள் உள்ள-ன. சாய ஆலைகளில் இருந்து கழிவுநீர் பெறப்பட்டு, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில் நுட்பத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. உயிரியல், வேதியியல் சுத்திகரிப்பு முடிந்தபின், சவ்வூடு பரவல் தொழில்நுட்பத்தில் அவை சுத்திகரிக்கப்படுகிறது. வெளியேறும் அடர் உப்பு நீர், 'எவாப்ரேட்டர்'களில் விடப்படுகிறது. உப்பு நீர் கொதிக்க வைக்கப்பட்டு, நீராவியை குளிர்வித்து, தண்ணீர் பிரித்தெடுக்கப்படுகிறது.'எவாப்ரேட்டர்' இயக்க, அதிகளவு மின்சாரம் தேவைப்படுகிறது; சுத்திகரிப்பு மையங்களின் மொத்த செலவில், மின் கட்டணம், 50 சதவீதமாக உள்ளது. எனவே, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுத்திகரிப்பு செலவை குறைப்பதில், சாய ஆலை துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, வெவ்வேறு வகை 'எவாப்ரேட்டர்' தொழில்நுட்பங்கள், வெள்ளோட்ட அடிப்படையில் சோதனை செய்து பார்க்கப்பட்டன.சுத்திகரிப்பு மையங்களில் தற்போது, எம்.இ., எம்.வி.ஆர்., என இரண்டு வகை எவாப்ரேட்டர் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் பயன்பாட்டை தவிர்த்து, புதிய சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை உருவாக்க, பஞ்சாப்பை சேர்ந்த ஒரு நிறுவனம் முன்வந்துள்ளது. இத்தொழில்நுட்பம் குறித்து சுத்திகரிப்பு மையத்தினர், சாய ஆலை துறையினருக்கு, செயல்விளக்கம் அளிக்க, அடுத்த வாரம், பஞ்சாப் குழுவினர் திருப்பூர் வருகின்றனர்.சாய ஆலை துறையினர் கூறியதாவது:சுத்திகரிப்பு மையங்களில் எவாப்ரேட்டர் பயன்பாட்டை தவிர்க்கும் புதிய தொழில்நுட்பத்தை பஞ்சாப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இத்தொழில்நுட்பம் திருப்பூருக்கு உகந்தது தான்; இதனை நிறுவுவதால், செலவினத்தை குறைக்க முடியுமா என, ஆராய்வது அவசியமாகிறது. இதுகுறித்த செயல்முறை விளக்கமளிக்க பஞ்சாப் வல்லுனர் குழுவினர், திருப்பூர் வருகின்றனர்; வீரபாண்டி பொது சுத்திகரிப்பு மையத்தில், கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதன்பின், திருப்பூர் குழுவினர், பஞ்சாப் சென்று, புதிய தொழில்நுட்பத்தை நேரில் பார்வையிடுவர். பல தரப்பட்ட முயற்சிகளால், சிறந்த தொழில்நுட்பங்களை புகுத்தி, சுத்திகரிப்பு செலவினங்களை படிப்படியாக குறைப்பதன் மூலம், சாய ஆலை துறை பலப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.சுத்திகரிப்பு மையங்களின் மொத்த செலவில், மின் கட்டணம், 50 சதவீதமாக உள்ளது. எனவே, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுத்திகரிப்பு செலவை குறைப்பதில், சாய ஆலை துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர்