ஆவடி: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, பெட்ரோலிய எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி, பள்ளி - கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற, விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, நேற்று நடந்தது.சென்னை, ஆவடி அடுத்த பட்டாபிராமில், இந்தியன் எண்ணெய் நிறுவனம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு குறைப்பு மற்றும் இயற்கை எரிவாயு பயன்பாடு குறித்து, விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.இதில், பள்ளி - கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற, விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, நேற்று காலை, 10:00 மணிக்கு, பட்டாபிராமில் துவங்கி, 2 கி.மீ., துாரம் பயணித்தது.பேரணியை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, கொடி அசைத்து, துவக்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, இந்தியன் எண்ணெய் நிறுவன பொது மேலாளர், சித்தார்த் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.மணலிசென்னை, பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், நேற்று காலை, எரிபொருள் சிக்கனம் குறித்து, விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, மணலியில் நடத்தியது.மணலி, சி.பி.சி.எல்., பாலிடெக்னிக் வளாகத்தில் இருந்து, நேற்று காலை, 7:00 மணிக்கு, விழிப்புணர்வு சைக்கிள் பேரணி துவங்கியது.பெரியதோப்பு, சி.பி.சி.எல்., - எம்.எப்.எல்., - எஸ்.ஆர்.எப்., வழியாக, 5 கி.மீ., கடந்து, சி.பி.சி.எல்., பாலிடெக்னிக் வளாகத்திற்கு வந்தடைந்தது.இதில், சிறுவர், மாணவர்கள், பெண்கள், முதி யோர் என, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ் மற்றும், 'டி - சர்ட்' வழங்கப்பட்டன.இதில், நிறுவன மேலாண் இயக்குனர், எஸ்.என்.பாண்டே, நடிகர் பரத், கிரிக்கெட் வீரர்கள் பாபா அபராஜித், பாபா இந்திரஜித், சின்னத்திரை நடிகர்கள் பலரும் பங்கேற்றனர்.