| பசுமை நிறைந்த நினைவுகளே... பழைய மாணவர்கள் சந்திப்பில் நெகிழ்ச்சி Dinamalar
பசுமை நிறைந்த நினைவுகளே... பழைய மாணவர்கள் சந்திப்பில் நெகிழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜன
2019
02:32

சென்னை: சென்னை மருத்துவக் கல்லுாரியில், 50 ஆண்டுகளுக்கு முன், எம்.பி.பி.எஸ்., படித்த மாணவர்கள், நேற்று சந்தித்து, தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.சென்னை மருத்துவக் கல்லுாரியில், 1969ம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., சேர்ந்த மாணவர்கள், படிப்பு முடித்த பின், 'கிளாஸ் ஆப் - 69' என்ற பெயரில், சங்கம் ஒன்றை உருவாக்கினர்.அவர்கள், கல்லுாரியில் சேர்ந்து, 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பொன்விழா நிகழ்ச்சி நேற்று, கல்லுாரியில் நடந்தது.இதில், 1969ல் படித்த, மாணவ - மாணவியர், தங்களின் குடும்பத்துடன் பங்கேற்றனர். அவர்கள், ஏற்கனவே திட்டமிட்டபடி, அனைவரும், ஒரே நிற ஆடையிலும், அடையாள அட்டையுடனும் வந்திருந்தது, பரவசத்தை ஏற்படுத்தியது.சங்கத்தின் தலைவர், ராஜேந்திரன், நிறுவன தலைவர், ரவி உள்ளிட்டோர், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.அவர்களுக்கு பேராசிரியர்களாக இருந்த, டாக்டர்கள் ஜி.ரங்கநாதன், நம்மாழ்வார், ரத்தினசபாபதி, ஸ்ரீராம், நம்பி, சொக்கலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, விட்டல் உள்ளிட்டோரும் வந்து, தங்களின் முன்னாள் மாணவர்களை வாழ்த்தினர்.விழாவில் பங்கேற்ற, முன்னாள் மாணவர்கள், கடந்த கால நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.இது குறித்து, சென்னை மருத்துவக்கல்லுாரியின் முன்னாள் மாணவியும், இன்றைய கண் மருத்துவ சிகிச்சை நிபுணருமான, டாக்டர் ஆர்.பிரேமா கூறியதாவது:முன்னாள் மாணவர் சந்திப்பு என்பது, மிகவும் உற்சாகமான தருணம்.எங்களுடன் படித்த சிலர், இப்போது உயிருடன் இல்லை என, நினைக்கும்போது, வருத்தமாக உள்ளது. இங்கு அனைவரும், நலமாக, நல்ல நிலையில் உள்ளனர்; அது, மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியின் நிறைவில், அனைவரும், குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X