| வண்டலுார் பூங்காவில் கரடி உயிரிழப்பு Dinamalar
வண்டலுார் பூங்காவில் கரடி உயிரிழப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜன
2019
02:33

வண்டலுார் உயிரியல் பூங்காவில், இந்திய வகையை சேர்ந்த சிறுகரடி ஒன்று, நேற்று முன்தினம் உயிரிழந்தது.சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்காவில், ஹிமாலயன் கரடிகள் இரண்டு, சிறுகரடிகள் மூன்று என, ஐந்து கரடிகள் பராமரிக்கப்பட்டு வந்தன.இதில், நேற்று முன்தினம் காலை, இந்திய வகையை சேர்ந்த, ‛லட்சுமணன்' என்ற சிறுகரடி, உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, கரடியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.நான்கு மாதங்களுக்கு முன், பூங்காவில் இருந்த, ஹிமாலயன் கரடி ஒன்று, உடல்நலக்குறைவால் இறந்தது. தற்போது, சிறுகரடியும் உயிரிழந்துள்ளதால், பூங்காவில் கரடிகளின் எண்ணிக்கை, மூன்றாக குறைந்துள்ளது.இது குறித்து, பூங்கா ஊழியர்கள் கூறியதாவது:பூங்காவில், விலங்குகளை பராமரிக்க, கால்நடை டாக்டர்கள், ஐந்து பேர் உள்ளனர். இதில், மூன்று பேர், நிரந்தரமாகவும்; இருவர், தற்காலிக அடிப்படையிலும் பணிபுரிகின்றனர்.இவர்கள், நாளொன்றுக்கு, இருமுறை வீதம், சுழற்சி முறையில், விலங்குகளை பரிசோதிக்க வேண்டும். ஆனால் அவர்கள், அப்பணியை சரிவர செய்வதில்லை. இதனால் தான், நோயின் தாக்கம் அதிகரித்து, விலங்குகள் உயிரிழக்க காரணமாகிறது.தற்போது, இறந்துள்ள சிறுகரடிக்கு, 8 வயதாகும் நிலையில், உயர் அதிகாரிகளின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, பூங்கா அதிகாரிகள், 15 வயது என, கணக்கு காட்டி உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


- -நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X