அரசு பள்ளி மைதானத்தை 'குடிமகன்கள்' ஆக்கிரமிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2019
23:12

உடுமலை:உடுமலை அருகே அரசுப்பள்ளி மைதானத்தை 'குடிமகன்'கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான மைதானம், ஒன்றிய அலுவலகத்தின் எதிர்புறத்தில் அமைந்துள்ளது.


பள்ளியிலிருந்து சற்றுத்தள்ளி மைதானம் உள்ளதால், மாணவர்களும், பள்ளி நிர்வாகத்தினரும், தொடர்ச்சியாக மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில், புதர் மண்டிக்கிடந்த மைதானத்துக்கு அரசு நிதியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.இதையடுத்து, அப் பகுதியிலுள்ள தன்னார்வ அமைப்பினர், வளாகத்தினுள், மரக்கன்றுகளை வைத்து பராமரித்தனர். மேலும், அப்பகுதி மக்கள் நடைப்பயிற்சி செல்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.இதனால், அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக மைதானம் மாறியது. சமீபகாலமாக, கிழக்குப்பகுதியில், சுற்றுச்சுவரையொட்டி இருக்கும் இடைவெளியில், 'குடிமகன்'கள் பகல் நேரத்திலேயே உள்ளே நுழைகின்றனர். நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் வீரர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட, இருக்கைகளை ஆக்கிரமித்து கொள்கின்றனர்.


மது அருந்தி விட்டு, காலிபாட்டில்களை அங்கேயே உடைத்துச்செல்கின்றனர். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், மைதானத்தில், நடைப்பயிற்சி செல்லவே பெண்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இவ்வாறு, அரசு மைதானம் படிப்படியாக 'திறந்தவெளி பாராக' மாற்றப்பட்டு வருகிறது.கண்டுகொள்ளாத போலீஸ்பெதப்பம்பட்டியில், விதிமுறைகளை மீறி, காலை நேரத்திலேயே மது விற்பனை ஜோராக நடக்கிறது.


மாநில நெடுஞ்சாலையையொட்டி அமைக்கப்பட்டுள்ள குடிசையில், அதிகாலை முதலே மதுபாட்டில்கள் விற்பனை செய்கின்றனர். இதுவே, அனைத்து பிரச்னைகளுக்கும் முக்கிய காரணமாக அமைகிறது. இவ்விடத்துக்கு அருகிலேயே, நின்று வாகன சோதனையில் குடிமங்கலம் போலீசார் ஈடுபடுவது உண்டு. இருப்பினும், 'சில்லிங்' மதுவிற்பனையை, போலீசார் கண்டுகொள்வதில்லை.அரசுப்பள்ளி மைதானத்தை பாழாக்கும் பணியில், குடிமங்கலம் போலீசாரும் இணைந்துள்ளதால், செய்வதறியாது அப்பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X