-தீவிரம்! தொழிற்சாலைகள் கொண்டுவருவதில் புதுச்சேரி அரசு...அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
00:09

- நமது நிருபர்-

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக, புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவருவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக, தொழில்முனைவோர், முதல்வர் நாராயணசாமியை வரும் 29ம் தேதி சந்திக்க உள்ளனர்.இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்., அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், புதிய தொழிற்சாலைகளை கொண்டுவருவதில் தீவிரம் காட்டி வருகிறது. மாநிலத்தின் தேவைக்கு ஏற்றவாறும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும் தொழில் தொடங்க, தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், தொழில் தொடங்குவதற்கான நடைமுறையை எளிதாக்க, சலுகைகளுடன் கூடிய புதிய தொழில் கொள்கையையும் கடந்த ஆண்டு அரசு வெளியிட்டது.தொழிற்சாலை துவங்க, அரசின் பல்வேறு துறைகளுக்கு இனி அலையாமல், ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அனுமதி அளிப்பது, வரிச்சலுகை, முதலீட்டு மானியம், வரி மானியம், உள்கட்டமைப்பு மானியம் மற்றும் புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை கவர்ந்திழுக்க வட்டி மானியம், மின்சாரம், முத்திரைத்தாள் விலக்கு என ஏகப்பட்ட சலுகைகளை அரசு வாரி வழங்கியுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இருந்தபோதிலும், ஐ.டி., தொழிற்சாலைகள் சொற்ப அளவிலேயே இருப்பதால், தொழில்நுட்பம்சார்ந்த படிப்பு முடித்த இளைஞர்கள் பலர் வேலை தேடி மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு செல்கின்றனர்.இந்நிலையில், புதுச்சேரி அரசு உருவாக்கியுள்ள புதிய தொழிற் கொள்கையினால், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதுச்சேரியில் தொழில் துவங்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, ஏராளமான தொழில் முனைவோர் புதுச்சேரியில் தொழில் தொடங்க முன்வந்து, விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிகிறது. புதிய தொழிற்சாலைகளை தொடங்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், வரும் 29ம் தேதி, வெளி நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழில் முனைவோர், முதல்வர் நாராயணசாமியை சந்திக்க ஏற்பாடு நடந்து வருகிறது.இது தொடர்பாக, தொழில்துறை அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். தொழில் துறை அமைச்சர் ஷாஜகான், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் மற்றும் துறைச் செயலர் பிரகாஷ்குமார் பாண்டா, செயலர்கள் சுந்தரவடிவேலு, சரண் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், புதுச்சேரியில் பசுமை தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கான அனுமதிகளை எளிமையாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய தொழிற் கொள்கையின் அடிப்படையில், தொழிற்சாலைகள் தொடங்க விண்ணப்பித்துள்ள வெளிமாநில மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்கள் குறித்த விவரங்களையும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.பின்னர், வரும் 29ம் தேதி, தொழில் முனை வோர் சந்திப்பு கூட்டத்தில், தொழிற்சாலைகளை கொண்டு வர எத்தகைய உறுதிகளை அரசு சார்பில் அளிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X