தென்னந்தோப்பில் தோட்டக்கலை பயிர் சாகுபடி: விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
00:49

உடுமலை:தென்னந்தோப்புகளில், பல அடுக்குகளாக தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி செய்வதால், கூடுதல் வருவாய் விவசாயிகளுக்கு கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.உடுமலை பகுதியில் பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. இச்சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பல அடுக்குகளாக தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. இத்தகைய சாகுபடியால், மண் வளம் அதிகரிப்பதுடன், வருவாயும் பல மடங்கு உயரும்.தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: தென்னந்தோப்புகளில், மரங்களுக்கு இடையில் கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி, பல்வேறு தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி செய்யலாம். தென்னை மரத்தின் மேல்பகுதியிலிருந்து, மண் பகுதி வரையுள்ள இடைவெளியில், பல்வேறு உயரங்கள் கொண்ட, பயிர்வகைகளை தேர்வு செய்து நடலாம்.முதல் அடுக்கில், அதிக உயரம் வளரக்கூடிய, ஜாதிக்காய், சில்வர் ஓக் ஆகிய மரங்களை நடவு செய்வதால், தென்னை மரங்களுக்கு இணையாக வளர்ந்து, நீண்ட கால வரவு கிடைக்கும்.இரண்டாவது அடுக்காக, தென்னை மரத்தை சார்ந்து, 12 முதல் 15 அடி உயரம் வரை ஓலைகளை ஊடுருவி, சூரிய ஒளியை அறுவடை செய்ய உதவும், குருமிளகு பயிரிடலாம். மூன்றாம் அடுக்காக தென்னையின் இடையே உள்ள மண் பகுதியில், ஆணி வேர்கள் செலுத்தி, குறைந்த உயரத்தில், 3 முதல் 4 அடி உயரம் மட்டும் வளரும் கோகோ பயிரை தேர்வு செய்யலாம்.மேலும், அதே உயரத்தில் வளரும் அகத்தி, கறிவேப்பிலை, மரவள்ளி ஆகிய பயிர்களையும் நடலாம். நான்காவது அடுக்காக நிழலில் மிகக்குறைந்த வெளிச்சத்தில் வளரும், அன்னாசிப்பழம், இதர புல்கரணைகள், கம்பு, கனகாம்பரம், இஞ்சி, சேனை, சம்பங்கி மலர், மல்லிகை ஆகிய சாகுபடிகளையும், நடவு செய்யலாம்.மண் வளத்தை பாதுகாக்கும், வெட்டிவேர், கொழுக்கட்டைப்புல், கொத்து அவரை, கொத்தமல்லி, ஆகியவற்றையும் கலந்து பயிரிட வாய்ப்புள்ளது. இத்தகைய அடுக்கு முறை சாகுபடியால், கூடுதல் வருவாய் கிடைக்கும். இத்தகைய ஊடுபயிர்களை பயிரிடும் போது, தென்னை பாதிக்கப்படாமல் இருக்க, மண் வளம் அறிந்து உரமிட வேண்டும்.இவ்வாறு, கூறினர்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X