நீயா நானா! 21, 500 விவாகரத்து வழக்கு தாக்கல்: விட்டுக்கொடுக்காததால் விபரீதம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 ஜன
2019
01:56
பதிவு செய்த நாள்
ஜன 22,2019 01:22

கோவை:கணவன் - மனைவி இடையே ஏற்டும் மனக்கசப்பால், குடும்ப நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த 13 ஆண்டுகளில், 21,500 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.குடும்ப பிரச்னை வழக்குகளை விசாரிக்க, கோவையில், இரண்டு குடும்ப நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.


இக்கோர்ட்டில், விவாகரத்து, கணவன் அல்லது மனைவியுடன் சேர்த்து வைக்க கோருதல், குழந்தைகள் பாதுகாப்பு கோருதல், ஜீவனாம்சம் உள்பட பல்வேறு நிவாரணம் கேட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.குடும்ப நீதிமன்றத்தில், மாதம்தோறும், 150 முதல் 200 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. 100 வழக்குகள் வரை தீர்வு காணப்படுகிறது. தீர்வு காணப்படும் வழக்குகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தேக்கமடைகிறது.குடும்ப நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, எதிர்மனு தாரர் ஆஜராகி, ஆறு மாதத்துக்குள், விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று, சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல ஆண்டுகள் விசாரணை இழுத்தடிக்கப்படுவதால், வழக்குகள் தேக்கம் அதிகரிக்கிறது. இரு தரப்பும் விவாகரத்துக்கு சம்மதிக்கும் பட்சத்தில் விரைவில் தீர்வு காணப்படுகிறது.ஆராய்ச்சி கூறுவதென்ன?பல்கலை ஒன்றில், விவாகரத்து தொடர்பாக, வக்கீல் ஒருவர் சமர்ப்பித்துள்ள பி.எச்.டி., ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ள விவரம்:* விவாகரத்து கேட்டு, பெண்கள் தான் அதிகமாக கோர்ட்டுக்கு வருகின்றனர். முதலில் கோர்ட்டை நாடுபவர்களும் அவர்களே.* விவாகரத்துக்கு, 90 சதவிகிதம் ஆண்களே காரணம்.* மாமியார் கொடுமையால், 45 சதவிகித பெண்களும், முறை தவறிய உறவு போன்ற காரணத்தால், 10 சதவிகிதம் பேரும், விவாகரத்து கேட்கின்றனர்.


நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்தவர்கள், 70 சதவிகிதம் பேரும், காதல் திருமணம் செய்தவர்கள் 25 சதவிகிதம் பேரும், இரண்டும் சேர்ந்து 5 சதவிகிதம் பேரும், விவாகரத்து கேட்கின்றனர்.* கிராமப்புறத்தை விட, நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் தான், அதிகளவில் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கின்றனர்.* 100ல், ஒரு திருமணம், விவாகரத்தில் முடிவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.* பொறியாளர் மற்றும் மருத்துவர்களாக பணியாற்றுபவர்கள் தான், அதிகளவில் விவாகரத்து கேட்கின்றனர். ஐ.டி., துறையில் பணியாற்றுபவர்களும் இவற்றில் அடங்குவர்.'ஈகோ'தான் காரணம்!வக்கீல்கள் கூறுகையில், 'தம்பதியர் இடையே சகிப்புத்தன்மை மற்றும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாதது, விவாகரத்து முடிவுக்கு முக்கிய காரணமாகிறது. மது பழக்கம், தகாத உறவுகள், கணவன் மற்றும் மாமியார் கொடுமை, கல்வியில் ஏற்றத்தாழ்வு போன்றவற்றால், குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில், ஆணுக்கு நிகராக பெண்களும், வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றனர். இதனால் கணவன் - மனைவி இடையே 'ஈகோ' ஏற்படுகிறது' என்கின்றனர்.திருமண வாழ்க்கை துவங்கிய பிறகு, கணவன் - மனைவிக்கு இடையே புரிந்து கொள்ளும் மனப்பக்குவம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தால், விவாகரத்தை தவிர்க்கலாம்.


குடும்ப நீதிமன்றத்தில்நிலுவை வழக்கு விவரம்


ஆண்டு நிலுவைவழக்கு2015 2,8202016 2,4202017 2,6002018 3,000நீதிபதி பணியிடம் காலிகோவை குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தேக்கத்தை குறைக்க, கூடுதல் நீதிமன்றம், 2015ல் திறக்கப்பட்டது. புதிய வழக்கு தாக்கல் செய்யப்படும் போது, இரண்டு கோர்ட்டுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. ஆனால், கூடுதல் நீதிமன்றம் திறக்கப்பட்ட பிறகு, இரண்டில் ஒரு நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாகவே இருக்கிறது. முதன்மை குடும்ப நீதிமன்றத்தில், கடந்த எட்டு மாதங்களாக, நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. இதனால் வழக்குகள் அப்படியே தேங்குகிறது. கூடுதல் நீதிமன்றம் திறக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறவில்லை.


13 ஆண்டுகளில் 21,500 வழக்குகள்!குடும்ப நீதிமன்றத்தில், 2015ல், 2,820 வழக்குகளும், 2016ல், 2,420 வழக்குகளும், 2017ல், 2,600 வழக்குகளும் நிலுவையில் இருந்தன. 2018, டிச., வரை 3,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே நேரத்தில், கடந்தாண்டில் மட்டும் சுமார் 2,000 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.கோவை குடும்ப நீதிமன்றத்தில், 2005 முதல் 2018 வரை, சுமார், 21,500 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CBE CTZN - Chennai,இந்தியா
23-ஜன-201913:38:53 IST Report Abuse
CBE CTZN இப்பொழுதெல்லாம் குடும்பத்துடன் ஒத்து வாழவேண்டும் என்ற எண்ணம் பெண்களிடம் குறைந்து வருகிறது.. கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் மிக அதிக சௌகரியதுடன் மாமனார் மாமியார் கொளுந்தனார் நாத்தனார் யாரும் இல்லாமல் நானும் என் புருசனும் மட்டும் இருந்தா போதும் என்ற எண்ணமே உள்ளது. இதற்க்கு பெண் வீட்டார் தான் முழு பொறுப்பு. எதார்த்தத்தை பேசுவதில்லை.. ஏதோ வெளி நாட்டவர் போல் வாழவேண்டும் என்ற எண்ணம்...
Rate this:
Share this comment
Cancel
Narayanan Sklaxmi - chennai,இந்தியா
23-ஜன-201909:01:54 IST Report Abuse
Narayanan Sklaxmi நீதிபதியே இல்லாத ஒரு கோர்ட் எதற்கு அதில் ரெகார்ட் ரூம் அசிஸ்டன்ட் டிபிஸ்ட் என்று ஒரு வேலையே இல்லாத நிலை உருவாக்கி மக்கள் வரிப்பணம் விரயம் செய்ய ஒரு அரசாங்கம் மற்றும் ஒரு நிதித்துறை இந்த நிகழ்வை கின்னஸ் போக்கில் ஏற்றலாம்
Rate this:
Share this comment
Cancel
22-ஜன-201918:58:49 IST Report Abuse
நக்கல் உறவுகளை பற்றி கவலைப்படாமல் பணம், தனிமனித சுதந்திரம், மேற்கத்திய நாகரீக பாதிப்பு இது போன்றவைகள்தான் முக்கியம் என்று இருப்பதால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.. வயதாகும்போதுதான் இதன் வலி புரியும் தெரியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X