சீட்டு நிதி நிறுவனம் ரூ.3 கோடி மோசடி: முதலீட்டாளர்கள் கண்ணீர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
01:30

கோவை:சீட்டு நிதி நிறுவனம்நடத்தி, ரூ. மூன்று கோடிஏமாற்றிய தந்தை-மகன் மீது நடவடிக்கை கோரி, கோவை கலெக்டர், போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை, சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோட்டில், ரொனால்டு ரீகன் என்பவர், தந்தை டேவிட் உடன் இணைந்து, 'கொங்குநாடு அன்னை சிட் பிரைவேட் லிமிடெட்' என்ற சீட்டு நிதி நிறுவனம் நடத்தினார். இதில், சுந்தராபுரம், போத்தனுார், செட்டிபாளையம், மாச்சம்பாளையத்தை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் சீட்டு சேர்ந்திருந்தனர்.அதிகபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் முதல், குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் வரையிலான தொகைக்கு சீட்டுகள் சேர்க்கப்பட்டிருந்தன. கடந்த ஆறு மாதங்களாக, சீட்டு கட்டி முடிந்தவர்களுக்கு, பணம் திருப்பி தரப்படவில்லை.'இன்று தருகிறேன், நாளை தருகிறேன்' எனக்கூறி, ஏமாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், பத்து நாட்களாக சீட்டு கம்பெனி அலுவலகம் மூடப்பட்டுள்ளது. சீட்டு நிறுவன உரிமையாளரின் போன், 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டோர் நேரில் சென்று விசாரித்தபோது, 'போலீஸ், கோர்ட்டுக்கு போனால் பணம் கிடைக்காது' என்று, டேவிட் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள், நேற்று, கோவை கலெக்டர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தனர். 'குறைந்தபட்சம் மூன்று கோடி ரூபாய் வரை, மோசடி செய்யப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட தந்தை-மகன் இருவரையும் கைது செய்து, எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும்' என்று, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
24-ஜன-201910:40:49 IST Report Abuse
pattikkaattaan அரசாங்கம் நடத்துகிற போஸ்ட் ஆப்பிஸ் , வங்கியில பணத்தை சேமிக்காம , அதிக வட்டி கிடைக்கும்னு கண்டவங்க கிட்ட பணத்தை போட்டா இப்படித்தான் அழுவனும் ..
Rate this:
Share this comment
Cancel
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
22-ஜன-201915:40:27 IST Report Abuse
Ram வங்கி, அஞ்சலகம் போய் பணத்தை போட்டால் வருமானவரி சிக்கல் வருமென்று தனியார் நிறுவனத்தில் சீட்டு போட்டால் மொத்தமா சுருட்டிட்டு போரீங்களே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X