| 60 சதவீத தொழிலாளர், 'ஆப்சென்ட்': திருப்பூர் நிறுவனங்கள் கவலை Dinamalar
60 சதவீத தொழிலாளர், 'ஆப்சென்ட்': திருப்பூர் நிறுவனங்கள் கவலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
01:36

திருப்பூர்:திருப்பூர் நிறுவனங்களில் பொங்கல் பண்டிகைக்குப்பின், 60 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகை முன்னிட்டு பனியன் தொழிலாளர்களுக்கு கடந்த, 13ம் தேதி முதல் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களில், 70 சதவீதம் பேர் விடுமுறை முடிந்து நேற்று பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், 40 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு திரும்பினர்.ஏற்றுமதியாளர் சங்க பொதுசெயலாளர் விஜயகுமார் கூறியதாவது:ஆடை தயாரிப்பு அவசரம் என்பதால், ஏற்றுமதி நிறுவனங்கள், கடந்த 18ம் தேதி முதல் இயக்கத்தை துவக்கிவிட்டன. சொந்த ஊர் செல்லாத வடமாநில தொழிலாளர்கள், தயாரிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.விடுமுறை முடிந்து இன்று (நேற்று), 60 முதல், 70 சதவீத தொழிலாளர் பணிக்கு திரும்பிவிடுவர் என எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், 40 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு திரும்பியுள்ளனர். போதுமான தொழிலாளர் இல்லாததால் ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பில் தாமதம் ஏற்படுவதால் ஆடைகளை அதிக செலவில், விமானத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிலை உருவாகியுள்ளது. பின்னலாடை நிறுவனங்கள் வசம் அதிகளவு ஆர்டர்கள் உள்ளன; தொழிலாளர்கள், தங்கள் பொறுப்பை உணர்ந்து, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.இவ்வாறு, விஜயகுமார் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X