| தமிழக தபால் நிலையங்களில் புதிதாக மேலும் 4 பாஸ்போர்ட் சேவை மையம் Dinamalar
தமிழக தபால் நிலையங்களில் புதிதாக மேலும் 4 பாஸ்போர்ட் சேவை மையம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
01:37

கோவை:தமிழகத்தில், நான்கு தபால் நிலையங்களில், 'பாஸ்போர்ட் சேவை' மையங்களை, பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்கிறார்.நாட்டின் அனைத்து பகுதி மக்களுக்கும் பாஸ்போர்ட் எளிதாக கிடைக்கும் வகையில் இந்திய தபால்துறை, வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து, தலைமை தபால் நிலையங்கள் மற்றும் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்களை தொடங்கி வருகின்றன.


இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக தபால்துறையின் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட குன்னுார், ராசிபுரம், தர்மபுரி, ஈரோடு தபால்நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.தபால்துறை அதிகாரிகள் கூறியதாவது:மக்களுக்கு பாஸ்போர்ட் சேவை, 50 கி.மீ., சுற்றளவுக்குள் கிடைத்திட வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு. மேற்கு மண்டலத்திற்குட்பட்ட சேலம் பகுதியில் கடந்த, 2017ல் பாஸ்போர்ட் சேவை மையம் துவங்கப்பட்டது.


தொடர்ந்து, நீலகிரியில் குன்னுார், நாமக்கல்லில் ராசிபுரம், தர்மபுரி, ஈரோடு தலைமை தபால் நிலைங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளது. வரும்., ஜன., 27ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அப்போது, தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைக்க முன்னேற்பாடுகள் நடந்துவருகின்றன.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X