ஏமாற்றிய மழையால் ஏரி, கிணறுகளில் வறட்சி , வாடிய பயிர்களால் புறநகர் விவசாயிகள் கவலை-
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 ஜன
2019
01:46

வடகிழக்கு பருவமழை, 20 சதவீதம் கூடுதலாக பெய்யும் என்ற, வானிலை ஆய்வு மைய கணிப்புகளை நம்பி, பயிரிட்ட புறநகர் விவசாயிகள், தண்ணீரின்றி பயிர்கள் வாடுவதை பார்த்து, அழுது புலம்புகின்றனர்.



மேலும், இந்த ஆண்டு விவசாய தொழிலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் வேதனை தெரிவித்தனர்.சென்னை, புறநகரில் உள்ள சிட்லபாக்கம் வேளாண் விரிவாக்க மையத்தின் கீழ்,வேங்கைவாசல், மாடம்பாக்கம், பதுவஞ்சேரி, நுாத்தஞ்சேரி, ஒட்டியம்பாக்கம், அகரம் தென் உட்பட, 32 கிராமங்கள் உள்ளன. இவற்றில், 2,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடக்கிறது.




இங்குள்ள, விவசாயிகள், பி.பி.டி., எனப்படும் பாபட்லா பொன்னி ரக நெல்லை பயிரிடுகின்றனர். வடகிழக்கு பருவமழை, வழக்கத்தை விட, 20 சதவீதம் கூடுதலாக பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இதை நம்பி, பரங்கிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகள் ஏராளமானோர், புதிதாக உழவூட்டி, நாற்று நட்டனர். ஆனால், எதிர்பார்த்ததை விட, மழை பொழிவு மிகவும் குறைவாகவே இருந்ததால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.




இது குறித்து, அகரம் தென் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, பெருமாள், 50 கூறியதாவது:2017ல், எதிர்பார்த்த அளவு, மழையில்லை என்றாலும், மாடம்பாக்கம், அகரம் தென், வேங்கை வாசல், ஒட்டியம்பாக்கம் ஏரிகளில், போதிய தண்ணீர் இருந்தது. இதனால், ஏரி பாசனத்தை நம்பி, கடந்தாண்டு நவம்பர் வரை, விவசாயம் நடந்தது.அப்போது, நல்ல மண் வளம், தண்ணீர் வசதி கொண்ட பகுதிகளில், ஏக்கருக்கு, 35 - 40 மூட்டை நெல் கிடைத்தது. அதே நேரம், மலட்டுத் தன்மை மற்றும் பயிர்கள் கருகியதால், சில இடங்களில், ஏக்கருக்கு, 10 - 20 மூட்டையே அறுவடையானது.கடந்தாண்டு பருவமழை குறைந்து, பனி பொழிவு அதிகரித்ததால், புதிதாக நடப்பட்ட பயிர்கள் கருகியும், மலட்டுத் தன்மை அடைந்தும், வாடி வருகின்றன.அனைத்து கிராமங்களிலும், 60 சதவீதம் அளவிற்கு, பயிர்கள் வாடி உள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.




பொதுவாக, சிட்லபாக்கம் வேளாண் மையத்திற்கு உட்பட்ட கிராமங்களில், ஆண்டுக்கு இரு போகம் மட்டுமே விவசாயம் நடக்கும்.இதில், முதல்போக அறுவடை, ஜனவரி இறுதியில் துவங்கும். தற்போது, அறுவடை காலம் நெருங்கி உள்ள நிலையில், பயிர்கள் கருகி காட்சி அளிக்கின்றன. இதனால், பெரும்பாலான கிராமங்களில், புதிதாக பயிர் நடவு செய்ய விவசாயிகள் முன்வரவில்லை.மேலும், மழையை நம்பி நடப்பட்ட பயிர்களும், கருகத் துவங்கி உள்ளதால், சம்பந்தப்பட்ட கிராமங்களில், நடப்பாண்டில் ஒரு போக சாகுபடியே கேள்விக்குறியாகி உள்ளது.




அதேபோல், நெற்பயிர்களுக்கு பதில், குறைந்த கால பயிர்களான, எள், மக்காச்சோளம், உளுந்து, கேழ்வரகு, பச்சை பயிறு உள்ளிட்டவற்றை பயிரிடவும், சிலர் முன்வந்துஉள்ளனர்.அதற்கேற்ப, வேளாண் விரிவாக்க மையத்தில், விதைகள் இல்லாததும், விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்திஉள்ளது.இந்த பிரச்னை குறித்து, வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். அவர்கள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.ஏரிகள் வறட்சி, மழை குறைவால், இந்த ஆண்டு விவசாய பரப்பளவு, 1,250 ஏக்கராக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம், மாற்றுப் பயிர்களுக்கான விதைகள், போதிய அளவு கையிருப்பில் உள்ளன. தேவைப்பட்டால், கூடுதலாக விதைகள் வாங்க முடிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.சிட்லபாக்கம் வேளாண் அதிகாரிகள்சிட்லபாக்கம் வேளாண் விரிவாக்க மையம், திருப்போரூருடன் இணைக்கப்பட்ட பின், அதிகாரிகளின் கள ஆய்வு குறைந்தது.




தற்போது, பயிர்கள் கருகியுள்ளதால், உழவு கூலி, நடவு கூலி மற்றும் இதர செலவுகள் என, ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் வீதம் கணக்கிட்டால் கூட, விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.பி.தீனதயாளன், 40, உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர், மாடம்பாக்கம்இயற்கை விவசாயம் அமோகம்!மழை குறைந்துள்ள போதும், புறநகரில், இயற்கை விவசாயம் கை கொடுத்துள்ளது. மாடம்பாக்கம், பதுவஞ்சேரி, நுாத்தஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகளில், 5க்கும் மேற்பட்டோர் இயற்கை முறையில், விவசாயம் செய்கின்றனர். அவர்களுக்கு, ஏக்கருக்கு, 80 மூட்டை நெல் அறுவடையாகிறது. அதில் இருந்து, 50 மூட்டை அரிசி கிடைக்கிறது. இதை, கிலோ, 60 ரூபாய் வீதம், ஏஜன்டுகள் தலையீடு இன்றி, நேரடியாக விற்பனை செய்கின்றனர்.




மேலும், இயற்கை விவசாயம் வாயிலாக கிடைக்கும், உணவு பொருட்களை, தங்களது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தவும், விதை நெல்லை, தங்களுக்குள்ளேயே பரிமாற்றம் செய்து கொள்ளவும், இயற்கை விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.



-நமது நிருபர்-



 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X