வட்ட பாதையில் புறநகர் மின்சார ரயில் இயக்கம், மின் மயமாகும் தக்கோலம் - அரக்கோணம் பாதை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2019
22:34

சென்னை: ''கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் - அரக்கோணம் - திருவள்ளூர் - கடற்கரை நிலையம் இடையே, வட்ட ரயில் பாதையில், மார்ச்சில், புறநகர் மின்சார ரயில் இயக்கப்படும்,''

என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரேஸ்தா கூறினார்.


சென்னை, கடற்கரை -தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருமால்பூர் இடையே, 2004ம் ஆண்டில் இருந்து, புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது.திருமால்பூர் - அரக்கோணம் ரயில் பாதையை, மின்மயமாக்கினால், கடற்கரை - செங்கல்பட்டு -காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருவள்ளூர் - கடற்கரைக்கு, வட்ட ரயில் பாதையில், மின்சார ரயில் இயக்கலாம் என, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.


இதற்காக, தக்கோலத்தில் இருந்து, அரக்கோணம் வரை, ரயில் பாதையை, மின் மயமாக்க, முடிவு செய்தது.இப்பாதையை மின்மயமாக்கினால், தக்கோலத்தில் உள்ள, ராஜாளி கடற்படை விமான நிலையத்தில், விமானங்கள் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்படும். இதனால், மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என, ராணுவ நிர்வாகம் வலியுறுத்தியது.


மாற்றுப் பாதை அமைக்க, நிதியும் வழங்கியது.இதையொட்டி, தக்கோலத்தில் இருந்து அரக்கோணம் வரை, 10 கி.மீ., புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு, 25ம் தேதி, தென்பிராந்திய ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன், இப்பாதையில் விரைவு ரயில் இயக்கி, சோதனை நடத்தினார்.அரக்கோணத்தில் கட்டப்பட்டுள்ள, ரயில்வே பாதுகாப்பு படையினரின் ஓய்வு இல்லத்தை திறந்து வைக்க சென்ற, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரேஸ்தா, அரக்கோணத்தில் இருந்து, தக்கோலம் வரை, ரயிலில் சென்று வந்தார்.'வட்ட பாதையில், ரயில் எப்போது இயக்கப்படும்?' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதில் அளித்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளர், குல்ஷ்ரேஸ்தா கூறியதாவது:ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், இப்பாதையில், 25ம் தேதி, விரைவு ரயில் இயக்கி சோதனை நடத்தியுள்ளார். பாதுகாப்பு சான்றிதழ், இன்னும் வழங்கவில்லை.சான்றிதழ் கிடைத்ததும், மார்ச் முதல் வாரத்தில், கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் - அரக்கோணம் - திருவள்ளூர் - சென்னை கடற்கரை ரயில் நிலையம் இடையே, வட்ட ரயில் பாதையில், புறநகர் மின்சார ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shankar - chennai,இந்தியா
02-பிப்-201915:14:16 IST Report Abuse
shankar எல்லாம் சரிதான் ஆனால் தாம்பரம் செங்கல்பட்டு இடையே உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் அகல ரயில் பாதையாக மாற்றம் செய்ய படாமல் உள்ளது.தற்போதுதான் அதற்கான வேலை துவங்கியது இருந்தும் மந்த கதியில் வேலை நடைபெற்று வருகிறது. இதனால் விரைவு மற்றும் புற நகர் மின்சார ரயில்கள் ஒரே பாதையில் பயணம் செய்வதால் சென்னைக்கு வேலைக்கு சென்று வரும் பயணிகள் குறித்த நேரத்தில் வேலைக்கும் செல்ல முடியவில்லை வீட்டிற்கும் செல்ல முடிவதில்லை மேலும் 12 மணி நேரத்திற்கு மேல் வாகன பார்க்கிங் கட்டணம் வேறு தனியாக செலுத்த வேண்டி உள்ளது. இதை தவிர்க்க நடவடிக்கை தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X