ரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகள் பரிந்துரை: 'மாஜி'க்கள் அதிர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
11:18

கரூர்: கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்துக்கு, புதிய நிர்வாகிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், அதிருப்தி ஏற்பட்டுள்ளது.


நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவராக, 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த ராஜா, மக்கள் மன்ற செயலாளராக அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், ராஜா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, பகவான் பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டார். இதனால், பல ஆண்டுகளாக, மன்ற பொறுப்புகளில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், எதிர்ப்பை வெளிகாட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தனர். இந்நிலையில், முதலில் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள், 10க்கும் மேற்பட்டவர்களை மாற்றி, புதிய மாவட்ட செயலாளர் பகவான் பரமேஸ்வரன், தலைமைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார். இதையறிந்த, நிர்வாகிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.


இதுகுறித்து, கரூர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது: பகவான் பரமேஸ்வரன், புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகத்துக்கு நெருக்கமானவர். அதை வைத்து கொண்டு, கரூர் மாவட்ட செயலாளர் பதவியை வாங்கி விட்டார். தற்போது, பல ஆண்டுகளாக ரஜினி ரசிகர் மன்றத்துக்கு உழைத்த நிர்வாகிகளை மாற்றி விட்டு, அவரது ஆதரவாளர்களை நியமிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலின் போது, ஜாதி பெயரில் கட்சி துவக்கிய பகவான் பரமேஸ்வரன், அதை மறைத்து ரஜினியை ஏமாற்றியுள்ளார். மேலும், பரிந்துரை செய்யப்பட்ட நிர்வாகிகளை, தலைமை ஏற்றுக்கொண்டு, அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், அவர்களை வைத்து தனியாக நேற்று கூட்டம் நடத்தியுள்ளார். அதில், ரஜினியால் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான நிர்வாகிகள் பங் கேற்கவில்லை. இதனால், அமைப்பு தேர்தல் வரும்போது, மாவட்ட செயலாளர் பதவிக்கு, பகவான் பரமேஸ்வரனை எதிர்த்து போட்டியிடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் பகவான் பரமேஸ்வரன் கூறுகையில், ''ரஜினியால் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் யாரும் நீக்கப்படவில்லை. சில நிர்வாகிகளின் பொறுப்பு மாற்றப்படுகிறது. பெரிய அளவில் உள்ள, ஒன்றியங்களை பிரித்து, அமைப்பு வேலையில் ஆர்வமாக உள்ள பலருக்கு பொறுப்புகள் வழங்கப்பட உள்ளது. புதிய நிர்வாகிகள் மீது, பழைய நிர்வாகிகள் குறை கூறுவது வழக்கமானது. என் மீது கூறப்படும் புகார்கள் பொய்யானவை,'' என்றார்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X