| சாலை பாதுகாப்பு வார விழா: ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி Dinamalar
சாலை பாதுகாப்பு வார விழா: ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 பிப்
2019
10:13

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், 30வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: விபத்தில்லா பயணம் என்பதை வலியுறுத்தி, சாலை பாதுகாப்பு வார விழா, ஒருவார காலம் கடைபிடிக்கப்படவுள்ளது. இதன்படி நேற்று, தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவது குறித்தும், இன்று அதிவேகமாக வாகனத்தில் செல்லுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து, கல்லூரி மாணவர்களுக்கு விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடக்கிறது. நாளை மறுநாள், வாகனங்களில் பொருத்தியிருக்க வேண்டிய ஒளிரும் பட்டைகள் மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 8ல், நான்குவழி, ஆறுவழிச் சாலைகளில் விதிகளை மீறிச் செல்வதால் ஏற்படும் தீமை குறித்தும், போக்குவரத்தின்போது சிக்னலில் காட்டப்படும் விளக்குகளின் விளக்கங்கள் குறித்தும் விளக்கப்படவுள்ளது. வரும், 9ல், ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனங்களுக்கு தகுதிச்சான்றுகள் வழங்கப்படவுள்ளன. அன்று, மாசில்லா பயணம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. 10ல், நிறைவுநாள் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், எஸ்.பி., ராஜசேகரன், வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

* குளித்தலையில், சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவையொட்டி, குளித்தலை சட்டம் ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார் இணைந்து, சுங்ககேட்டில் நேற்று காலை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு, சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பைக்கில் விழப்புணர்வு பேரணி நடந்தது. போலீசார், ஊர்க்காவல் படையினர் கலந்துகொண்டனர்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X