தமிழக அரசு பட்ஜெட்: வரவேற்பும் ஏமாற்றமும்: பல்வேறு தரப்பினர் கருத்து
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2019
08:04

கரூர்: தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை பலர் வரவேற்றுள்ளனர்.


துணை முதல்வரும், நிதியமைச்சருமான பன்னீர் செல்வம், 2019 - 20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். அதில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.


இதுகுறித்து, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி: மாற்றம் ஏமாற்றம் இல்லாத மாமூல் பட்ஜெட்டாக உள்ளது. விவசாயத் துறைக்கு, 2 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை கூடுதலாக எதிர்பார்த்தோம். அரசின் நிர்வாக செலவு, 25 சதவீதத்திற்கு உள்ளே இருக்க வேண்டும். ஆனால், 70 சதவீதம் இருப்பதாக, முதல்வரே கூறியிருந்தார். அதை குறைக்க திட்டம் இல்லை. பற்றாக்குறை, 2.85 சதவீதத்தில் இருந்து, 2.56 சதவீதமாக குறைத்துள்ளனர். அதை வரவேற்கிறோம். அண்டை மாநிலங்களில் உள்ளது போல, நீர்ப்பாசன துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். ஆனால், அறிவிப்பு இல்லை. மக்களுக்கான நலத்திட்டங்கள் அதிகம் உள்ளது. அதை மனதார வரவேற்கி றோம். கள் மீதான தடை குறித்து அறிவிப்பு இல்லாததது ஏமாற்றம் அளிக்கிறது.


கரூர் மாவட்ட அனைத்து வர்த்தக சங்க தலைவர் ராஜூ: தொழில் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளனர். அதை வரவேற்கிறோம். சூரிய மின்சக்தி மின்சாரத் துக்கு, 90 சதவீதம் மானியம் அளித்துள்ளனர். இந்த அறிவிப்பு விவசாயிகளை ஊக்கப்படுத்தும். நெல், கரும்புக்கு கொள்முதல் விலையை அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. மாநிலம் முழுவதும், 2,698 டாஸ்மாக் மதுக் கடைகளை மூடியுள்ளனர். அதை வரவேற்கிறோம். கரூர் மாவட்டத்தில், க.பரமத்தி, அரவக்குறிச்சி பஞ்சாயத்து யூனியன் பகுதிகளுக்கு, காவிரி குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள, சுங்கச் சாவடிகளில் கட்டணம் குறைப்பை எதிர்பார்த்தோம். அதுதொடர்பான அறிவிப்பு இல்லாததால், ஏமாற்றமாக உள்ளது.


காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம்: லோக்சபா தேர்தலுக்காக, சமச்சீர் பட்ஜெட்டை அறிவித்துள்ளனர். இருக்கிற நிதியை, அனைத்து துறைகளுக்கும் ஒதுக்கியுள்ளனர். விவசாயிகளுக்கு, கூட்டுறவு கடன் அதிகரிப்பு, உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு தலா, ஐந்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு அறிவிப்புகளை வரவேற்கிறோம். கணினி பட்டாவில் உள்ள குறைபாடுகளை நீக்க, எம்.ஜிஆர்., ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட, நில உரிமை மேம்பாட்டு திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும். நீர்மேலாண்மை குறித்து, ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அறிவிப்பு வெளியாகி வருவது மகிழ்ச்சியாக உள்ளது.


கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த இல்லத்தரசி மஹாலட்சுமி: கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்காக, விலையில்லாத வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்க, 198 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்க, 48 கோடி ரூபாய், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு, 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.


காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்க மாநில துணைச் செயலாளர் கவுண்டம்பட்டி சுப்பிரமணியன்: தமிழக பட்ஜெட்டில், விவசாயிகள் கூட்டுறவு சங்க கடன் குறித்து அறிவிப்பு இல்லை. நெல், கரும்புக்கு அதிகப்படியான விலை நிர்ணயம் செய்யவில்லை. குடிமராமத்து பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. காவிரி ஆற்றில் கூடுதல் தடுப்பனை கட்டுவது குறித்து அறிவிப்பு இல்லை. மாயனூர் காவிரி கதவனையில் இருந்து தாயனூர்வரை கட்டளை மேட்டு வாய்க்கால் நவீனபடுத்த திட்ட கருத்துகள் தயார் செய்யப்பட்டு, மாநில அரசுக்கு அனுப்பியும், அதற்காக அறவிப்பு இல்லை. தமிழக பட்ஜெட் விவசாயிகளுக்கு சாதகமாக இல்லை.


கட்டளை தென்கரை பாசன வாய்க்கால் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் மருதூர் சம்பத்: தமிழக பட்ஜெட்டில் நெல். கரும்பு கொள்முதல் நிர்ணய விலை உயர்வு குறித்து அறிவிப்பு இல்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, வருவாய் பெருக்கம் குறித்து அறிவிப்பு இல்லை. மாயனூர் காவிரி ஆற்று கதவனையில் இருந்து பெட்டவாய்த்தலைக்கு இடையே தடுப்பு அணை அறிவிப்பு இல்லை. விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு ஏதும், தமிழக பட்ஜெட்டில் இல்லை.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X