| பரிசீலனை! முறைகேடு குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க..அரசு ஒப்புதலுக்காக அதிகாரிகள் காத்திருப்பு Dinamalar
பரிசீலனை! முறைகேடு குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க..அரசு ஒப்புதலுக்காக அதிகாரிகள் காத்திருப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 பிப்
2019
05:06

மதுரை:மதுரை மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்டு அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய கிரானைட் குவாரிகளிடம் அபராதம் வசூலிக்க அரசு ஒப்புதலுக்காக கனிம வளத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

இம்மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட கிரானைட் குவாரிகளால் அரசுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இது

குறித்து சகாயம் ஐ.ஏ.எஸ்., தலைமையிலான குழுவினர் விசாரித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து நிலுவையில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் முறைகேடாக செயல்பட்ட 83 கிரானைட் குவாரிகளிடம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை

அபராதமாக வசூலிக்க முடிவு செய்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதை எதிர்த்து குவாரி நிறுவனத்தினர் தாக்கல் செய்த மனுக்களை

உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து வேறு வழியின்றி சில கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மட்டும் நோட்டீசுக்கு பதிலளித்தனர். மற்றவர்கள் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது. தற்போது அந்த குவாரிகளிடமிருந்து அபராதம் வசூலிப்பது குறித்து கனிம வள அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். குவாரிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்புவது குறித்து அரசு ஒப்புதலையும் கேட்டுள்ளனர். அரசு ஒப்புதல் அளித்ததும் முறைகேடு குவாரிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி அபராதம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X