| இரும்பு தூண்கள் சரிந்து போக்குவரத்து பாதிப்பு Dinamalar
இரும்பு தூண்கள் சரிந்து போக்குவரத்து பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 பிப்
2019
08:25

திருச்சி: லாரியில் ஏற்றி வந்த இரும்புத் தூண்கள் சரிந்து விழுந்ததில், திருச்சி - தஞ்சை சாலையில், ஆறு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருச்சி, துவாக்குடியில், 'ஐடெக் பவர் பிளாண்ட்' என்ற பெயரில் உள்ள நிறுவனம், தெலுங்கானா அரசு பணிக்கு தேவையான இரும்புத் தூண்களை தயாரித்து அனுப்பி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு டிரைய்லர் லாரி மூலம், இரும்புத்தூண்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. திருச்சி - தஞ்சை சாலையில், காட்டூர் அருகே லாரி சென்றபோது, அதில் ஏற்றியிருந்த தூண்கள் சரிந்து, லாரி நகர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஒருபக்கம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு, ஆறு கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, ஆறு மணி நேரம் போராடி, அந்த தூண்கள் மீண்டும் லாரியில் ஏற்றப்பட்டன. இதனால் நேற்று காலை வரை, திருச்சி - தஞ்சை சாலையில், ஒருவழியில் முற்றிலும் போக்குவரத்து தடைபட்டது.


 

Advertisement
மேலும் திருச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X