| குடிநீருக்கு 'சில்வர் கேன்' அரசு பள்ளியில் அசத்தல் Dinamalar
குடிநீருக்கு 'சில்வர் கேன்' அரசு பள்ளியில் அசத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 பிப்
2019
23:32

திருப்பூர்:'பிளாஸ்டிக்' இல்லா பள்ளியை உருவாக்கும் முயற்சியாக, மேட்டுப்பாளையம் பள்ளி மாணவர்கள், சில்வர் வாட்டர் கேன் பாட்டிலுடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.திருப்பூர் பி.என்., ரோட்டில், மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது.


ஜன., 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு, தமிழக அரசு தடை விதித்தது.எனவே, இப்பள்ளி ஆசிரியர்கள், 'மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தவிர்க்க வேண்டும். நம்மால் முடிந்தவரை ஒவ்வொன்றாக தவிர்த்து வந்தால், மாற்றத்தை ஏற்படுத்த முடியும்' என, குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கினர்; பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திலும், இதனை வலியுறுத்தினர்.


இதன் பலனாக, ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில், பலர் சில்வர் பாட்டிலை வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர்.பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'பிளாஸ்டிக் இல்லா பள்ளியை உருவாக்க முடிந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். பெற்றோர் தங்களால் இயன்றளவு குழந்தைகளுக்கு சில்வர் பாட்டிலை வாங்கி கொடுத்துள்ளனர். இது மற்ற மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வாக உள்ளது,' என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X