ரயில் கழுவும் தண்ணீர் 'வேஸ்ட்' ஆகாது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

12 பிப்
2019
07:40
பதிவு செய்த நாள்
பிப் 12,2019 00:09

கோவை: கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, சுத்திகரிக்கும் மறுசுழற்சிக்கூடம், முழு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.



சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர், சேலம் உட்பட, 94 ஸ்டேஷன்கள் உள்ளன. இதில், கோவை, ஈரோடு, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில், ரயில்கள் பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.கோவை ரயில்வே பணிமனையில், ரயில்களை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும், ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர், தினமும் கழிவுநீராக வெளியேறி வந்தது.இந்த தண்ணீரை மறுசுழற்சி செய்து, மீண்டும் பயன்படுத்தும் திட்டத்துக்கான பணி கடந்தாண்டு துவங்கியது.



சேலம் கோட்டத்தில் முதன் முறையாக, 1.2 கோடி ரூபாய் மதிப்பில், நடந்து வந்த கழிவுநீர் மறுசுழற்சிக்கூடம், தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.இதன்படி, 'பயோ கெமிக்கல் பிராசஸ்' மூலம் தினமும், 4 லட்சம் லிட்டர் கழிவுநீரை மறுசுழற்சி செய்து, பயன்படுத்த முடியும். இச்சுத்திகரிப்பு நீர், பெட்டிகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-பிப்-201900:49:45 IST Report Abuse
தமிழ்வேல் இதற்குப்பதில் சுத்தம் செய்வதற்கு ஷெட் ஏற்படுத்தி மின்சார பிரஷ் உருளைகளால் கழுவப்பட்டால் (கார்கள் போல) எல்லா இடங்களும் (மேல்பகுதி கூட) சிரமம் இல்லாமல் சுத்தமாகும். 10 நிமிடங்களில் அனைத்து கேரேஜ்களும் சுத்தமாகிவிடும். நீரும் குறைவாக தேவைப்படும். தொழிலாளிகள் உள்பக்கத்தில் சுத்தம் செய்யலாம்.
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
13-பிப்-201917:27:37 IST Report Abuse
சுந்தரம் உபயோகப்படுத்திய தண்ணிரை மறு சுழற்சி செய்து மீண்டும் நல்ல தண்ணிராக மாற்றுவது 70 களிலேயே தொடங்கிவிட்டது. சென்னையில் பிரபல உரத்தொழிற்சாலை (MFL) இத்திட்டத்தை அமல்படுத்தியது. ஆனால் என்ன காரணத்தாலோ சுமார் ஐம்பதாண்டுகள் காலம் தாழ்த்தி ரயில்வே இப்போது தொடங்கி இருக்கிறது. காலம் தாழ்த்தினாலும் இப்போதாவது செய்தார்களே என்று பெருமைப்படுவோம். இதை ஒழுங்காக பராமரித்தால் நல்லது. துவக்கத்தை விளம்பரப்படுத்திவிட்டு திட்டத்தை மூடியதை மறைக்காமல் இருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
SOUNDAR -  ( Posted via: Dinamalar Android App )
13-பிப்-201907:41:20 IST Report Abuse
SOUNDAR எல்லா வண்டிகளும் கழுவ படுவதில்லை.சேத்துப்பட்டு yard IL இடமில்லை என்பதால் சில ரயில்கள் கோடம்பாக்கம் மவுண்ட் பல்லாவரம் தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள loop லயன்களில் நாள் முழுவதும் நிறுத்தப்படுகின்றன. இந்த ரயில்கள் சுத்தம் செய்யப்படாமல் கழுவப்படாமல் அப்படியே மீண்டும் இயக்கப்படுகின்றன. பெட்டிகள் எல்லாம் அழுக்கு பிடித்து வாந்தி எடுத்த மாதிரி உள்ளன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X