'செல்வமகள்களுக்கு' உதவ வாங்க! அழைக்கிறது தபால்துறை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
00:16

கோவை:பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, தபால்துறை துவங்கிய செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் குழந்தைகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக, கோவை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் சுதிர்கோபால் ஜகாரே தெரிவித்தார்.அவர் கூறியதாவது:செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைய பிறந்த குழந்தை முதல், 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில், அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ ரூ.250 செலுத்தி, தபால் அலுவலகங்களில் கணக்கு துவக்கலாம். இத்திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு, வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.ஆண்டுக்கு, 8.5 சதவீத வட்டி என, 21 வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைக்கும். அவசர தேவையெனில், ஐந்து ஆண்டு நிறைவில் கணக்கை முடித்து கொள்ளலாம். திருமணம் மற்றும் படிப்பு செலவுக்கு, 18 வயதில் சேமிப்பு தொகையில் பாதி அளவை பெறலாம்.தமிழ்நாடு தபால்துறை வட்டத்தில், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைவதில், கோவை கோட்டம் இரண்டாமிடத்தில் உள்ளது.நடப்பாண்டு திட்டத்தில் இணைய 18,200 பேர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, தற்போது வரை 4,954 பேர் இணைந்துள்ளனர்.சேராத ஏழை சிறுமியர்க்கு, தொண்டு நிறுவனங்கள், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவி பெற்று, திட்டத்தில் சேர உதவ உள்ளோம். இதன் வாயிலாக, 70 சதவீதம் பேர் நிச்சயம் தொடர்ந்து சேமிப்பில் ஈடுபடுவர். உதவ விரும்புவோர், கோவை தலைமை தபால் நிலையத்தை, 0422 - 2395637 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.ஆண்டுக்கு, 8.5 சதவீத வட்டி என, 21 வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைக்கும். அவசர தேவையெனில், ஐந்து ஆண்டு நிறைவில் கணக்கை முடித்து கொள்ளலாம். திருமணம் மற்றும் படிப்பு செலவுக்கு, 18 வயதில் சேமிப்பு தொகையில் பாதி அளவை பெறலாம்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X