கோவை:தேர்வின் போது மாணவர்களின் மன உணர்வு சார்ந்த கருத்தை பதிவிடும், தேசிய அளவிலான போட்டியில், கோவை பள்ளி ஆசிரியை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மத்திய அரசு சார்பில், தேர்வை எதிர்கொள்ளும் விழிப்புணர்வை, மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில், ஆசிரியர்களின் கருத்தை பெறும், போட்டி நடந்தது. இதில், நாடு முழுக்க ஆசிரியர்கள் பதிவிட்டதில், சிறந்த கருத்துகள் தேர்வு செய்யப்பட்டன.தமிழகத்திலிருந்து எட்டு ஆசிரியர்கள் தேர்வாகினர். கோவை, பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளியின் கணினி ஆசிரியை லட்சுமி, இப்போட்டியில் தேர்வானார். பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு, 'எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் ஆசிரியர்கள், திறன்மிகுந்தவர்களாக விளங்க வேண்டுமென' அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் பங்கேற்றதற்காக, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், ஆசிரியை லட்சுமியை பாராட்டினார்.