கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க..முன்னெச்சரிக்கை!ஒன்றியங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
00:21

உடுமலை:கோடைகாலம் துவங்க உள்ளதையொட்டி, குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைகள் மக்களை பாதிக்காத வகையில், ஒன்றிய நிர்வாகங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.உடுமலை ஒன்றியத்தில், 38, ஊராட்சிகள் உள்ளன. கோடை காலம் துவங்குவதையொட்டி ஊராட்சிகளில், தற்போது முதலே குடிநீர் பிரச்னைகள் தலைதுாக்க துவங்கியுள்ளன.


கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம், பூலாங்கிணர் மற்றும் குடிமங்கலம் கூட்டுக்குடிநீர் திட்டம், மடத்துக்குளம் கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.ஒவ்வொரு குடிநீர் திட்டத்திலும் பயன்பெறும் கடைக்கோடி ஊராட்சிகளில், குடிநீர் தட்டுப்பாடு கோடைக்கு முன்பாகவே ஆரம்பமாகியுள்ளது.பல ஊராட்சிகளில், முறைகேடான குழாய் பதிப்புகளாலும், குடிநீர் பாதிப்பு தொடர் பிரச்னையாக இருக்கிறது. பதிவு செய்யப்பட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வினியோகம் இருப்பினும், அதே ஊராட்சியில் வசிக்கும் கடைகோடி பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்கு இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகம் ஏற்படுகிறது.இத்தகைய பிரச்னைகளை தவிர்க்க, முன்னேற்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மாவட்ட நிர்வாகம் ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. குடிநீர் பிரச்னைகள் குறித்து, பொதுமக்கள் பதிவு செய்யும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். குழாய் உடைப்புகள், மோட்டார் பிரச்னைகள், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் எந்தந்த பகுதிகளில் அதிகமாக ஏற்படும் என்பதை கண்காணித்து, அப்பகுதிகளில் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.புகார் பதிவுக்கு இலவச எண்ஒவ்வொரு, ஒன்றியத்திலும், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு, 'குடிநீர் தட்டுப்பாடு அறை', என்று அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அலுவலர்கள், முழுமையாக அந்தந்த ஒன்றியங்களில் நாள்தோறும் வினியோகிக்கப்படும் குடிநீர் அளவு குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்புகின்றனர்.


குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைகள் தொடர்பான புகார்களின் மீது, நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுபாடு பிரச்னைகள் குறித்து புகார் பதிவு செய்வதற்கு, 18004257023 என்ற இலவச தொலைதொடர்பு எண்ணை பயன்படுத்தலாம். இதில், எந்த பகுதியில், குடிநீர் வினியோகத்தில் உள்ள பிரச்னை குறித்து புகார் தெரிவிக்க வேண்டும்.இந்த புகார்கள் மாவட்ட நிர்வாகத்தில், பதிவாகிறது. தொடர்ந்து, புகார்களை, அந்தந்த ஒன்றியங்கள் வாரியாக பிரித்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு அறைக்கு, அனுப்பப்படுகிறது.


அதன் பின்னர், ஒன்றிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர்.சீரான குடிநீருக்கு சிக்கனம் தேவைகுடிநீர் தட்டுப்பாடுகளை தவிர்க்க, பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது. தேவைக்கேற்ப மட்டுமே குடிநீரை பயன்படுத்த வேண்டும்.குடிநீரை வீணாக்குவதும், மற்ற அனைத்து பயன்பாடுகளுக்கும் குடிநீரை பயன்படுத்துவதையும் மக்கள் கட்டுப்படுத்த வேண்டும். சிக்கனமாக பயன்படுத்தினால், சீரான குடிநீரை நாள்தோறும் பெற முடியும் என ஒன்றிய நிர்வாகத்தினரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X