பழங்கால கோவில்கள் பராமரிப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
00:44

உடுமலை:பழங்கால கோவில்கள் பராமரிப்புக்கு, இந்து அறநிலையத்துறையினர் முக்கியத் துவம் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.உடுமலை, குடிமங்கலம் பகுதியில், பழமையான கோவில்கள் அதிகளவு உள்ளன. இக்கோவில்களுக்கு, மன்னர்கள், பாளையக்காரர்கள் தானமாக அளித்த நிலங்கள், இந்து அறநிலையத்துறையால் ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது.இதனால், அத்துறைக்கு, நிரந்தர வருவாய் கிடைத்து வருகிறது. இருப்பினும், இக்கோவில்கள், முறையான பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வருகின்றன. பல நுாற்றாண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள், சிற்பங்களை உள்ளடக்கிய கோவில்களின் நிலையால், அப்பகுதி மக்கள் வேதனைக்குள்ளாகின்றனர். சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன், கொங்கலக்குறிச்சி செல்லாண்டியம்மன், பெரியபட்டி ரங்கநாத பெருமாள் உட்பட உடுமலை தாலுகாவில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 30க்கும் மேற்பட்ட கோவில்கள், புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷகம் நடத்தப்படாமல் உள்ளது.இதில், சில கோவில்களை புதுப்பிக்க, தொல்லியல்துறையின், தொழில்நுட்ப பரிந்துரையும் பெறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை அடிப்படையில், நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும் என இந்து அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு இதுவரை அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.பல கோவில்களில் மழைக்காலங்களில், உள்ளே தார்ப்பாய் கட்டி, தண்ணீரை தடுக்கும் நிலை காணப்படுகிறது. எனவே, பழங்கால கோவில்களை பராமரிக்க, நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X