மின் கம்பம் மீது டூ - வீலர் மோதல்  ஒருவர் பலி;  ஒருவர் காயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
00:47

சோமங்கலம்:குடிநீர் குடித்தவாறே மோட்டார் சைக்கிளை ஒட்டிச் சென்ற இளைஞர், மின் கம்பம் மீது மோதி இறந்தார்.சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித், 24. போரூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர். ஸ்ரீபெரும்புதுார் அருகே, சோமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு ரஞ்சித், இரண்டு தினங்களுக்கு முன் சென்றார்.உறவினர் மகன் சாலமன், ௧8, என்பவருடன், நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில், போரூர் சென்றார். பின், மாலையில், இருவரும், சோமங்கலம் நோக்கி, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குப் புறப்பட்டனர்.சோமங்கலம் அருகே மேலத்துார் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளை ஒட்டி சென்ற ரஞ்சித், பின்னால் அமர்ந்திருந்த சாலமனிடம், குடிநீர் பாட்டிலை வாங்கி உள்ளார்.பின், குடிநீரை குடித்தவாறே மோட்டார் சைக்கிளை ஒட்டிச் சென்றார். அப்போது, சாலை திருப்பத்தில், கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதினார்.இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ரஞ்சித் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இறந்தார். சாலமன் காயங்களுடன், சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X