| ஆட்டோ நகருக்கு பட்டா இல்லை Dinamalar
ஆட்டோ நகருக்கு பட்டா இல்லை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
00:49

வாகன பழுது பார்ப்போர் சங்கம் மனு
காஞ்சிபுரம்:கீழம்பியில் உள்ள, ஆட்டோ நகர் பகுதிக்கு, இதுவரை பட்டா வழங்காத காரணத்தால், அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை என, மோட்டார் வாகன பழுது பார்ப்போர் சங்கத்தினர், காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் பொன்னையா தலைமையில், ஆட்சியர் வளாக கூட்டரங்கில், நேற்று காலை, 10:00 மணிக்கு நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் நலச்சங்கத்தின் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:காஞ்சிபுரம் நகரின் சுகாதார நலன் கருதி, மோட்டார் பழுது பார்க்கும் பணிமனை தொழிலாளர்களுக்கு, 2007ல், அன்றைய ஆட்சியர் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் முயற்சியால், கீழம்பி கிராமத்தில், 12.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்டது.அப்போது, நில மதிப்பிலிருந்து ஒரு மடங்கு செலுத்தப்பட வேண்டும் என, அரசாணை கூறியது. அதன்படி, 10 லட்சம் ரூபாய், வங்கியில் பணம் செலுத்தி வரைவோலை வழங்கப்பட்டது.அதன் பின், ஆட்டோ நகரில் பணிமனைகள் கட்டி நாங்கள் செய்து தொழில் வருகிறோம். ஆட்டோ நகர் இடத்திற்கு பட்டா வழங்க, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில், மனு அளித்துள்ளோம்.ஆனால், இதுவரை எங்களுக்கு பட்டா வழங்காத காரணத்தால், ஆட்டோ நகரில் அடிப்படை வசதிகள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை.உதாரணமாக, சாலை, குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட எந்த வசதியும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே, எங்களின் வாழ்வாதாரம் காக்க, ஆட்டோ நகர் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X