ஆதனுாரில் இரண்டு வீடுகளில் திருட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
00:50

16 சவரன் திருட்டு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த, ஆதனுார், விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கவுதமன், 43. கடந்த 9ம் தேதி, குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தார். அதன் பின், அவர், வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த, 16 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

'மாஜி' ராணுவ வீரர் வீட்டில் திருட்டு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த, ஆதனுார், விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜெயசீத்தாராமன், 55. முன்னாள் ராணுவ வீரர். கடந்த 9ம் தேதி, குடும்பத்தோடு, காஞ்சிபுரம் சென்றார். நேற்று முன்தினம், அவர், வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்.அதன் பின், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த, 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்த இரண்டு திருட்டுகள் குறித்து, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

மாணவி துாக்கிட்டு தற்கொலைமறை

மலைநகர்: மறைமலைநகர் அடுத்த, பொத்தேரி, திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த மோகன்ராஜ் மகள் நிரஞ்சனா, 18. அதே பகுதியில் உள்ள, தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார். அவர், சில பாடங்களில் தேர்ச்சி பெறாததால், பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.இதனால், மனமுடைந்த, நிரஞ்சனா, நேற்று முன்தினம் இரவு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறைமலைநகர் போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

சாலை விபத்தில் பெண் பலி

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த, கிளாம்பாக்கம், அய்யஞ்சேரி கணேஷ் நகரைச் சேர்ந்தவர் சரவணன், 40. மகள் கஸ்துாரி, 18. இவர்கள், 9ம் தேதி, 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், கிளாம்பாக்கம் வளைவில் திரும்பினார். வாகனத்தை, சரவணன் ஓட்டிச் சென்றார்.அப்போது, செங்கல்பட்டிலிருந்து, சென்னை சென்றுக் கொண்டிருந்த லாரி, சரணவன் ஓட்டிச் சென்ற, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த, அவர்களை, அருகிலிருந்தவர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம், கஸ்துாரி இறந்தார். இதுகுறித்து, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X