| வன விலங்குகளின் தாகத்தை தீர்க்க ஏற்பாடு: தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறை Dinamalar
வன விலங்குகளின் தாகத்தை தீர்க்க ஏற்பாடு: தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
01:04

கூடலுார்:முதுமலையில் வறட்சி அதிகரிப்பதால், விலங்குகளின் தாகத்தை போக்க, வெளிவட்ட பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில், குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறை யினர் ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஆண்டு தேவையான அளவு பருவமழை பெய்தது. ஆனால், நடப்பாண்டு மழை ஏமாற்றி வருகிறது. கோடைக்கு முன்னதாகவே வனங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து, வன விலங்குகள் உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவைகளுக்கு உணவு குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.இந்நிலையில், முதுமலையில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கடந்த மாதம் முதல், வனங்களில் உள்ள தொட்டிகளில், சுழற்சி முறையில் குடிநீர் ஊற்றப்பட்டு வருகிறது.அதனை தொடர்ந்து, முதுமலை வெளிவட்ட பகுதிகளிலும் (பப்பர்ஜோன்), வனத்துறையினர், வாடகை வாகனங்களில் குடிநீர் எடுத்து சென்று தொட்டிகளில் ஊற்றி, வன விலங்குகளின் தாகத்தை போக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில்,'முதுமலை வெளிவட்ட பகுதிகளில் உள்ள, சீகூர், மசினகுடி, சிங்காரா, தெங்குமரஹாடா வனச் சரகங்களில் கோடைக்கு முன்பே வறட்சி துவங்கியுள்ளது. வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வாடகை வாகனங்களில் குடிநீர் எடுத்து சென்று, தொட்டிகளில் ஊற்றி வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய துவங்கியுள்ளோம். இப்பணிகள் கோடைகாலம்முடியும் வரை, தொடரும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X