| பள்ளி சுவரில் பழங்குடியினர் குறித்த ஓவியம்: சுற்றுலா பயணிகள் வியப்பு Dinamalar
பள்ளி சுவரில் பழங்குடியினர் குறித்த ஓவியம்: சுற்றுலா பயணிகள் வியப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
01:04

கூடலுார்:கூடலுார், முதுமலை நுழைவு வாயில் அருகேயுள்ள, தொரப்பள்ளி அரசு பள்ளி சுற்றுச் சுவரில், பழங்குடி மக்களின் கலாசாரம் குறித்து வரைந்துள்ள ஓவியங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.கூடலுார் தொரப்பள்ளி அருகே, முதுமலை நுழைவு வாயிலை ஒட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது.இந்த பள்ளி சுவரில், கூடலுாரில் மண்ணின் மைந்தர்களான, பழங்குடி மக்களின் கலாசாரத்தை விளக்கும் வகையில், ஓவியமாக வரைந்துள்ளனர். அதில், பழங்குடி பெண்கள் அணியும் காதோலை, உடை, குடிசை, தெய்வ வழிபாடு, பாரம்பரிய இசையுடன் பெண்களின் நடனம் குறித்த ஓவியங்கள் தத்துரூபமாக காணப்படுகின்றன.இவ்வழியாக ஊட்டிக்கு செல்லும் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஓவியங்களை ரசித்து, புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.பெங்களூருவை சேர்ந்த சுற்றுலா வாகன ஓட்டுனர் ராஜ்குமார் கூறுகையில்,''பழங்குடியினர் குறித்த ஓவியங்கள் தத்துரூபாக உள்ளது, சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதே போன்று அவர்கள் கலாசாரம் குறித்த மேலும், பல ஓவியங்களை வரைவதுடன், அவர்கள் குறித்த குறிப்புகளை தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதி வைத்தால், பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.பள்ளி தலைமை ஆசிரியை (பொ) பிரமிளா கூறுகையில், ''பழங்குடியினர் கலாசாரம் குறித்து பள்ளி சுவற்றில் வரைந்துள்ள ஓவியங்கள், சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருவதன் மூலம், மேலும், பல ஓவியங்கள் வரைய முயற்சித்து வருகிறோம். இதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும்உதவலாம்,'' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X