டீ கடை கதவை உடைத்த கரடி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
01:10

கோத்தகிரி:கோத்தகிரி நகரில் காளவாய், கோட்டஹாட் மற்றும் விண்டிகேப் சாலையில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.கோத்தகிரி - கன்னேரிமுக்கு சாலையில், கே.எம்.எப்., மருத்துவமனை அருகே, டீ கடை கதவை நேற்று முன்தினம் இரவு, கரடி உடைத்துள்ளது. உள் அறையில் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்த ஹரிதாஸ் என்பவர், சப்தத்தை கேட்டு, பின்பக்கம் கதவு வழியாக, வெளியே வந்து பார்த்தபோது, கரடி கதவை உடைத்து கொண்டிருந்தது. அறையில் இருந்தவர்கள், அலறி அடித்து வேறு பகுதிக்கு ஓட்டம் பிடித்தனர்.அச்சமடைந்த அவர், அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தார். பின், மக்கள் வந்து சப்தம் எழுப்பி, கரடியை விரட்டியுள்ளனர். இரவு முழுவதும் துாக்கத்தை இழந்த ஹரிதாஸ் மற்றும் அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, வனத்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.மக்கள் கூறுகையில், 'சமீப காலமாக, கரடிகளின் நடமாட்டம் இப்பகுதியில் அதிகரித்துள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை மாலை நேரங்களில் ஒருவர் சென்று அழைத்து வர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வனத்துறையினர் கரடி நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், இப்பகுதிக்கு வரும் கரடியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக் குள் விட வேண்டும்,' என்றனர்.

 

மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X