இலவச பயணத்தால் மெட்ரோ ரயிலில் பயணியர் குதூகலம்: 'குட்டீஸ்'களுடன் குடும்பமாக பயணித்து உற்சாகம். மேலும் ஒருநாள் நீட்டிக்கப்படுமாஎன எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

12 பிப்
2019
07:34
பதிவு செய்த நாள்
பிப் 12,2019 01:43

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின், இலவச பயண அறிவிப்பை தொடர்ந்து, அனைத்து வழித்தடத்திலும், நேற்று நாள் முழுவதும், குழந்தைகளுடன், குடும்பமாக பயணித்து, மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.



டி.எம்.எஸ்., வரை, திட்டத்தை செயல்படுத்திய போது அறிவிக்கப்பட்டதை போல, தற்போதும், மேலும் சில நாட்களுக்கு இலவச பயணம் கிடைக்குமா எனவும், பயணியர் எதிர்பார்க்கின்றனர்.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின், முதல்கட்டமாக, பரங்கிமலை - சென்ட்ரல், விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை இடையே திட்டம் அறிவிக்கப்பட்டது.இந்த திட்டத்தின் படி, பணிகள் முடிந்த பகுதிகளில், ஒவ்வொரு கட்டமாக, போக்குவரத்து துவங்கப்பட்டது. இதன் படி, இறுதியாக நேற்று முன்தினம், டி.எம்.எஸ்., - வண்ணாரப்பேட்டை இடையே, மெட்ரோ ரயில் இயக்கத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.இதைத் தொடர்ந்து, முதல்கட்ட திட்டம் முழுமை பெற்றுள்ளது.



இதில், வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வரை, முதல்கட்ட விரிவாக்க பணி மட்டும், நடந்து வருகிறது.பிரமாண்ட கட்டுமானம்மெட்ரோ முதல்கட்ட திட்டம், முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ள மகிழ்ச்சியில், அனைத்து வழித்தடத்திலும், நேற்று முன்தினம் மாலை முதல், நேற்று இரவு வரை, பயணியர் இலவசமாக பயணிக்கலாம் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை முதல், கட்டணமின்றி பயணியர், மெட்ரோ ரயிலில் பயணித்து மகிழ்ந்தனர்.அனைத்து ரயில்களிலும், நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. மக்கள், தங்கள் குழந்தைகளுடன், குடும்பமாக, மெட்ரோ ரயிலில் பயணித்து உற்சாகமடைந்தனர்.ஒவ்வொரு நிலையத்திலும் இறங்கி, நிலையங்களின் பிரமாண்ட கட்டுமானங்களை வியப்புடன் பார்த்தனர். ரயில் இயக்கம், நிலையத்தின் உள்ள தொழில்நுட்ப வசதிகள் குறித்து, சிறுவர்கள், ஊழியர்களிடம் ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.



சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டியில் இருந்தும், குடும்பத்துடன் வந்திருந்து, மெட்ரோ ரயிலில் மக்கள் பயணம் செய்தனர்.சுரங்க பயணத்தின் போது, தங்களை அறியாமல் சப்தமிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பயண பாதுகாப்பு, அறிவிப்புகள், ஊழியர்களின் கண்காணிப்பு மற்றும் உதவி ஆகியவை, பயணியரை வெகுவாக கவர்ந்துள்ளது.நிரம்பி வழிந்ததுவெளியூர்களில் இருந்து வந்த கல்லுாரி மாணவ - மாணவியர், நிலையங்களிலும், ரயில் பயணத்தின் போதும், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.இதற்கிடையே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நேற்று காலை முதல் மதியம் வரை, மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப் பேட்டை வரை, ஒரு வழித்தடத்தில் மட்டும், ரயில் இயக்கப்பட்டது.




இதனால், இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து நிலையங்களிலும், பயணியர் கூட்டம் நிரம்பி வழிந்தது, பலர் கூட்டம் காரணமாக, பயணிக்காமல் திரும்பினர்.இந்நிலையில், சின்னமலை - டி.எம்.எஸ்., இடையே, மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்ட போது, ஒரு வாரம் வரை, பயணியர் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதே போல, தற்போது ஒரு சில நாட்களுக்கு, மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொள்ள, நிர்வாகம் அனுமதிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.மின் தடையால் பாதிப்பு!மின் தடை காரணமாக, நேற்று காலை, 8:15 மணிமுதல், 8:50 மணிவரை, வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. சைதாப்பேட்டை - சின்னமலை இடையே, ரயில் பாதை மின் தொடர்பில், தடை ஏற்பட்டதால், பிரச்னை ஏற்பட்டது. காலை, 8:50 மணி முதல், வண்ணாரப்பேட்டையில் இருந்து, மீண்டும் ரயில் போக்குவரத்து, ஒரு வழிப்பாதையில் மட்டும் துவங்கப்பட்டது.



இதனால், வண்ணாரப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வரை மட்டுமே, ரயில் இயக்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்து, ஆலந்துார் வரையும் இயக்கப்பட்டது. இதனால், பயணியர் ஆலந்துாரில் இறங்கி, விமான நிலையத்துக்கு மற்றொரு ரயிலில் செல்லும் நிலை ஏற்பட்டது. மாறி மாறி சென்றதால், பயணியர் அதிருப்தியடைந்தனர்.மதியம், 1:40 மணி வரை, இந்நிலை நீடித்தது. அதன்பின், ரயில்கள் தாமதமின்றி, 14 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டன.



விமான நிலையம் - வண்ணாரப்பேட்டைக்குபஸ், கார், மெட்ரோ ரயில் கட்டணம் எவ்வளவு?சென்னை விமான நிலையத்தில் இருந்து, வண்ணாரப்பேட்டைக்கு, பஸ், கால் டாக்சி, மெட்ரோ ரயில் பயண கட்டணம் விபரம் வருமாறு:விமான நிலையத்தில் இருந்து, வண்ணாரப்பேட்டை வரை கட்டணம் ரூபாயில்:எம்.டி.சி.,பஸ் (எக்ஸ்பிரஸ்) மெட்ரோ ரயில் - ஆட்டோ - கால் டாக்சிகிண்டி - 10 - 40- 100 - 220சைதாப்பேட்டை - 12 - 40 - 150 - 230டி.எம்.எஸ்., - 13 - 50 - 200 - 350ஆயிரம் விளக்கு - 16 - 50 - 220 - 410சென்ட்ரல் - 19 - 50 - 250 - 540உயர் நீதிமன்றம் - 21 - 60 - 300- 570வண்ணாரப்பேட்டை - 24 - 60 - 450 - 645


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
12-பிப்-201916:18:11 IST Report Abuse
Bhagat Singh Dasan மக்கள் எல்லாவற்றையும் இலவசமாக எதிர்பார்க்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
12-பிப்-201915:17:10 IST Report Abuse
Indhuindian இலவசம்ண்ணா எமலோகத்துக்குக்கூட பிரயாணத்துக்கு ரெடி
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-பிப்-201915:13:03 IST Report Abuse
Natarajan Ramanathan மெட்ரோ ரயில் முழுதும் ஒரே கட்டுமரம்தான் போங்க......அதாங்க வித்தவுட்டு.......
Rate this:
Share this comment
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-பிப்-201909:35:30 IST Report Abuse
DARMHARமெட்ரோ ரயில் நிறுவனம் தான்மக்களுக்கு வெள்ளோட்டத்தின் போது இலவசகமாக பயணம் அனுமதித்தது . காலம் சென்ற அரசியல் தலைவர்களை குறிக்கும் வண்ணம் தரக்குறைவாக விமர்சிப்பது பண்புடைமை ஆகாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X