போலீஸ் டைரி....
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
01:56

ரூ.10 ஆயிரம், 28 சவரன் திருட்டு

திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர், திருவேங்கடம், 30; மென் பொறியாளர். சில நாட்களுக்கு முன், இவரது வீட்டு பீரோவிலிருந்த, 28 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய் திருடு போனது. அண்ணா சதுக்கம் போலீசார், நேற்று, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 23, உட்பட மூவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்டவன் கைது

கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர், பொன்முடி, 42; தனியார் நிறுவன ஊழியர். அவருக்கும், அம்பத்துாரைச் சேர்ந்த சிம்சன், 27, என்பவனுக்கும், முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, கீழ்ப்பாக்கம் பகுதியில், நடந்து சென்ற பொன்முடியை வழிமறித்து, சிம்சன் தாக்கி உள்ளான். கீழ்ப்பாக்கம் போலீசார், நேற்று காலை, சிம்சனை கைது செய்தனர்.கடையின் பூட்டு உடைத்த மூவர் கைது

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர், நாகூர் மீரான், 34; அதே பகுதியில், மொபைல் சர்வீஸ் கடை வைத்துள்ளார். நேற்று காலை, கடையை திறக்க சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்டு, 26 மொபைல் போன்கள் திருடு போனது தெரிந்தது. ஆர்.கே.நகர் போலீசார், வியாசர்பாடியைச் சேர்ந்த மூர்த்தி, 19, உட்பட, மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 26 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.100 கிலோ குட்கா பறிமுதல்திருவான்மியூரைச் சேர்ந்தவன், கதிரேசன், 39; மளிகை கடை வைத்துள்ளான். அதே பகுதியைச் சேர்ந்தவன், சுப்ரமணி, 41. இவர்கள், குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வந்தனர். திருவான்மியூர் போலீசார், இருவரையும் நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்து, 100 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

 பூந்தமல்லி அடுத்த, குமணன்சாவடியைச் சேர்ந்தவன், ஏழுமலை, 31. பெட்டிக்கடை வைத்துள்ள இவன், பான் மசாலா விற்று வந்தான். பூந்தமல்லி போலீசார், நேற்று முன்தினம் இரவு, ஏழுமலையை கைது செய்து, 60 பான் மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிப்பு?

கொருக்குபேட்டையைச் சேர்ந்தவர், அனுராதா, 33. நேற்று மதியம், 3:00 மணிக்கு, மாதவரம், ரெட்டேரி அருகே, தனக்கு அறிமுகமான ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த அவன், அனுராதாவை கத்தியால் குத்தி, 2 சவரன் செயின், 5,000 ரூபாயை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பீர் பாட்டிலால் தாக்கியவர்கள் கைது

சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர், சுதாகர், 30; ஆட்டோ ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த, 17 வயதுடைய, இரு சிறுவர்கள், சுதாகரிடம் பணம் கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில், இரண்டு சிறுவர்களும் சேர்ந்து, சுதாகரை, பீர் பாட்டிலால் தாக்கி தப்பினர். சைதாப்பேட்டை போலீசார், இருவரையும் நேற்று பிடித்து, சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

வழிப்பறி செய்தவன் கைது

புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர், நடராஜ், 30. இவர், நேற்று காலை, தண்டையார்பேட்டையில் நடந்து சென்றார். அப்போது வந்த ஒருவன், கத்தியை காட்டி, நடராஜின் மொபைல் போன், 2,000 ரூபாயை பறித்து தப்பினான்.புதுவண்ணாரப்பேட்டை போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த டேவிட், 23, என்பவனை கைது செய்து, மொபைல், பணத்தை பறிமுதல் செய்தனர்.

சிலையை திருடிய ஆசாமி

புதுவண்ணாரப்பேட்டை, சிவகாமி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 32; மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர், 'குடி' போதையில், நேற்று நள்ளிரவு, வீட்டருகே உள்ள, கோவிலில் இருந்து, முருகன் கல் சிலையை திருடி, எடுத்துச் சென்றார். இதுகுறித்து, பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார், சிலையை மீட்டு, கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணமூர்த்தி, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவரை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X