போலீஸ் செய்திகள்..,,,.,.,.
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
02:56

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

மதகுபட்டி:மதகுபட்டி அருகேயுள்ள கட்டாணிபட்டி தங்கவேலு மகன் செல்லபாண்டி 21. இவரை பிப்.,9 ம் தேதி மாலை 4:30 மணிக்கு அதே ஊரை சேர்ந்த ராமு மகன் கண்ணன் 31, கணேசன் மகன் ராஜாபிரபு, சந்திரன் மகன் பாலமுருகன் 21, கட்டாணி மகன் சந்தோஷ்குமார் 32, ஆகியோர் கல்லால் அடித்து காயப்படுத்தினர். காயமுற்றவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மதகுபட்டி எஸ்.ஐ., பெரியசாமி, கட்டாணிபட்டியில் உள்ள பெண் ஒருவரை கேலி செய்ததாக எழுந்த விவகாரத்தில் செல்லப்பாண்டியை தாக்கியதாக நான்கு பேர் மீது வழக்கு பதிந்துள்ளார்.

தகராறுமூவர் மீது வழக்கு

திருப்புவனம்: மேலவெள்ளுரைச் சேர்ந்த வீரணன் மனைவி பாண்டீஸ்வரி40, இவர் அறுவடை செய்த நெல்லை ரோட்டில் காயவைத்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த வேல்முருகன், பிச்சைமணி, கண்ணன் ஆகிய மூவரும் டிராக்டரை நெல் மீது ஓட்டி சென்றுள்ளனர். தட்டி கேட்ட பாண்டீஸ்வரியை தாக்கி மிரட்டியுள்ளனர். திருப்புவனம் போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மஞ்சுவிரட்டு10 பேர் மீது வழக்கு

சிவகங்கை: சிவகங்கை அருகே காமராஜர் காலனியில் பிப்.,9 அன்று அரசு அனுமதியின்றி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தினர். இதில் 20 காளைகள் பங்கேற்றது. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 4 பேர் காயமுற்றனர். அனுமதியின்றி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காஞ்சிரங்கால் வி.ஏ.ஓ., கவுரிசங்கர் போலீசில் புகார் அளித்தார். சிவகங்கை போலீசார் விழா கமிட்டியை சேர்ந்த மோகன்ராஜ் 38, உட்பட 10 பேர் மீது வழக்கு பதிந்தனர்.

வாலிபர் தற்கொலை

இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள மேலாயூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கருணாநிதி 19. சென்னையில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்கு வந்தவர், நேற்று முன்தினம், தனது ஊரில் நடந்த திருமண விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு, நண்பர்கள் தன்னை பின்னர் சாப்பிட கூறியதோடு, தன்னை யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை என தனது சின்னம்மாள் பஞ்சாளிடம் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் கருணாநிதி வயலில் உள்ள ஒரு மரத்தில் துாக்கிட்டு இறந்தார். இளையான்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.கார்கள் மோதல் ஒருவர் பலி

திருப்புவனம்: சிவகங்கை--மதுரை ரோட்டில் படமாத்துார் விலக்கு அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர்.மதுரை கரும்பாலையைச் சேர்ந்தவர் முருகேசன்60, இவர் நண்பர் பன்னீர்செல்வத்துடன் காரில் சிவகங்கையில் இருந்து மதுரை சென்றார். சிவகங்கை--மதுரை ரோட்டில் படமாத்துார் விலக்கு அருகே எதிரே வந்த காரில் மோதியதில் கார் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த முருகேசன் உயிரிழந்தார். பன்னீர்செல்வம், அரிச்சந்திரன், குமரேசன் காயமடைந்தனர். எதிரே வந்த காரை ஓட்டிய கல்லுாரணியைச் சேர்ந்த சமயத்துரை 40 காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முருகேசனின் மகள் இலக்குமலா கொடுத்த புகாரின் பேரில் பூவந்தி இன்ஸ்பெக்டர் உமாதேவி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

வழிப்பறிஒருவர் கைது

சிவகங்கை:சிவகங்கையில் வழிப்பறியில் ஈடுபட்ட சேலம் வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை அருகே பில்லுார் கருப்பையா மகன் சதீஷ்குமார் 28. இவர் சிவகங்கை-- மதுரை ரோட்டில் நடந்து சென்றபோது, சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த சதீஷ் 24, வழிமறித்து பையில் இருந்த ரூபாயை வழிப்பறி செய்தார். சிவகங்கை எஸ்.ஐ., கலைச்செல்வன், வழிப்பறியில் ஈடுபட்ட சதீைஷ கைது செய்தார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X