சுற்றுலா பயணிகளை கவர்ந்த இசை நிகழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
03:33

புதுச்சேரி:புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த கடற்படையின் பேண்டு இசை நிகழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.இந்தியா ராணுவத்தினரின் தியாகத்தை போற்றவும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தவும் மத்திய அரசு 'பாரத் பர்வ்' சிறப்பு நிகழ்ச்சியை அறிவித்தது. இந்திய கடற்படை தினம் மற்றும் பாரத் பர்வ் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை பல்வேறு முக்கிய நகரங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறது. சென்னையில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தி, கடற்படையின் தியாகங்கள் வெளிப்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக புதுச்சேரியில் நேற்று முன்தினம் மாலை கடற்கரையில் இந்திய கடற்படையின் பேண்டு இசை நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்களுக்கு பிடித்த நாட்டு பற்று, வீர வணக்க பாடல்கள், தமிழ், இந்தி சினிமா பாடல்கள், மேற்கத்திய இசையை இசைத்தனர். இந்த பேண்ட் இசை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன், நடனமாடியும் மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி, பிரெஞ்சு துணை துாதர் கேத்ரின் சுவார்ட், புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங், புதுச்சேரி, தமிழ்நாடு இந்திய கடற்படை உயரதிகாரி ஸ்ரீவத்சா உள்பட பலர் கலந்து கொண்டனர். கடற்படை அதிகாரிகள் கூறும்போது இந்திய கடற்படை பொதுமக்களுக்கு ஆற்றி வரும் சேவையை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியால் இந்திய கடற்படையோடு, பொதுமக்களின் நெருக்கம் இன்னும் அதிகரித்துள்ளது என்றனர்.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X