காங்., பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
03:47

நெட்டப்பாக்கம்:ஏம்பலம் அருகே காங்., பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் நள்ளிரவில் வெடிகுண்டு வீசியதால் பதட்டம் நிலவியது.ஏம்பலம் அடுத்த மணக்குப்பம் காலனியைச் சேர்ந்தவர் சபரிகிரிஜன்,31; மங்கலம் தொகுதி இளைஞர் காங்., துணைத் தலைவரான இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும், ஒரு மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு பச்சிளம் குழந்தை அழுததால், சபரிகிரிஜன் மனைவி ராஜேஸ்வரி பால் எடுக்க சமையல் அறைக்கு சென்றார்.அப்போது வீட்டின் வெளியே இருந்த மர்ம நபர்கள் சமையலறையில் இருந்து வருவது சபரிகிரிஜன் என நினைத்து வீட்டின் மேல் வெடி குண்டு வீசினர். அதில், வீட்டின் மேல் அமைக்கப்பட்ட சிமெண்ட் ஷீட் உடைந்து, ராஜேஸ்வரி மீது விழுந்ததில், அவர் படுகாயமடைந்தார்.சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த சபரிகிரிஜன் குடும்பத்தினர், ராஜேஸ்வரியை மீட்டு புதுச்சேரி மருத்துவமனையில் சேர்த்தனர். சீனியர் எஸ்.பி., அபூர்வாகுப்தா, எஸ்.பி., ரங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். வெடிண்டு நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.முதல் கட்ட விசாரணையில், சபரிகிரிஜன், அரசியல் வளர்ச்சி காரணமாக வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X